ஆன்ட்ராய்டு வசதிகளை அள்ளிப் பருக ஓர் புதிய டேப்லெட்!

இ-பன் நிறுவனம் எப்போதுமே மிக நவீன மின்னனு சாதனங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் முன்னனியில் இருக்கும். மேலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் குறைந்த விலையில் இருக்கும். தற்போது இ-பன் ஒரு புதிய 7எஸ் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் டேப்லெட்டை களமிறக்குகிறது. ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்டிவிஜ் இயங்கு தளத்தில் இந்த புதிய டேப்லெட் இயங்குவதால் இதைப் பயன்படுத்துவோர் ஏராளமான வசதிகளை இதில் அனுபவிக்கலாம்.
இந்த இ-பன் டேப்லெட் 800 x 480 பிக்சல் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. 1ஜிஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் ப்ரோசஸரைக் கொண்டுள்ளதால் இது சீராக இயங்கும் வலிமை கொண்டது. மேலும் இந்த டேப்லெட் 4ஜிபி சேமிப்பு, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், பேர்னஸ் மற்றும் நோபுள் நூக் ஸ்டோர் வசதி, கெட் ஜார் ஆப் ஸ்டோர் வசதி, ஜி சென்சார், 2.0 மினி யுஎஸ்பி போர்ட், ப்ளாஷ் 11 சப்போர்ட் மற்றும் வைபை போன்ற சூப்பரான தொழில் நுட்பங்களுடன் இந்த டேப்லெட் வருகிறது.
இதில் இருக்கும் பேர்னஸ் மற்றும் நோபுள் நூக் ஸ்டோர் மூலம் 2.5 மில்லியன் தலைப்புகளில் தகவல்களைத் தேட முடியும். மேலும் இந்த டேப்லெட் செய்தித் தாள்கள், க்ளாசிக்ஸ், குழந்தைகள் புத்தகங்கள், புதிய வெளியீடுகள், நாளிதழ்கள் போன்றவற்றையும் இந்த டேப்லெட்டில் பெற முடியும்.
இந்த டேப்லெட் பொழுதுபோக்கு அம்சங்களையும் ஏறாளமாக கொண்டிருக்கிறது. இதன் முகப்பு கேமரா மூலம் வீடியோ உரையாடலை மிக எளிதாக நடத்தலாம். மேலும் இதில் உயர் 1080பி வீடியோ ப்ளேயரும் உண்டு. இதில் யுடியூப் வீடியோவைப் பார்க்க முடியும். அதுபோல் இமெயிலையும் சூப்பராக அனுப்ப முடியும்.
இந்த இ-பன் டேப்லெட் பல கேம் வசதிகளையும் கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ.7000 ஆகும். இது ஒரு குறைந்த விலை ஆண்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் டேப்லெட் ஆகும்.


Click it and Unblock the Notifications