இரட்டை டிஸ்ப்ளே வசதியுடன் புதிய லேப்டாப்!

Posted By: Karthikeyan

இரட்டை டிஸ்ப்ளே வசதியுடன் புதிய லேப்டாப்!

வரும் ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் லாஸ் வேகாசில் நடைபெறும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியை கணினி உலகமே ஆவலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எல்லா நிறுவனங்களும் தமது புதிய கெட்ஜெட்டுகளை அறிமுகப்படுத்த இப்போதேத் தயாராகி வருகின்றன.

அதில் நாஜ் எம் டெக்கும் ஒரு முக்கிய நிறுவனம் ஆகும். அதன் இரட்டை திரை லேப்டாப் வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் நுட்ப அறிஞர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

இந்த புதிய டிவைசின் பெயர் யு-புக் ஆகும். இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால் இந்த லேப்டாப் துணை டிஸ்ப்ளே திரையைக் கொண்டிருப்பது என்பதாகும். அதுவும் இந்த துணை டிஸ்ப்ளே தொடு திரை வசதி மற்றும் மல்டி டச் வசதியையும் கொண்டுள்ளது.

இந்த யு-புக் லேப்டாப்பைப் பற்றி அதிகமான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் லேப்டாப்பில் உள்ள கன்வென்சனல் கீபோர்டுக்கு இந்த 2வது திரை பதிலியாக வரும் என்று நம்பலாம். இந்த 2 திரை கொண்ட லேப்டாப் குறைந்த கட்டுப்பாட்டு பட்டன்களைக் கொண்டுள்ளது. இதன் முக்கிய டிஸ்ப்ளே ஒரு ஸ்டேன்டர்டு டிஸ்ப்ளே ஆகும். இதன் 2வது டிஸ்ப்ளே ஒரு இன்புட் டிஸ்ப்ளே ஆகும்.

இதன் வெர்ச்சுவல் கீபோர்டில் வித்தியாசமான லேஅவுட்டுகள் இருக்கும். மேலும் இந்த கீபோர்டு டிஸ்ப்ளேயில் பல மொழிகள் இருக்கும். குறிப்பாக அந்தந்த பகுதிகளில் இருக்கும் மொழிகளை நாம் தேர்ந்தெடுக்க முடியும்.

அதுபோல் எண்ணற்ற கஸ்டமைசேசன் வசதிகளும் இந்த லேப்டாப்பில் வருகின்றன. அதாவது இதில் வெர்ச்சுவல் ட்ராக் பேடையும் பார்க்கலாம். மேலும் இந்த லேப்டாப் விண்டோஸ் 7 இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது.

இந்த நாஜ் எம்டெக் யு-புக் லேப்டாப்பின் விலை பற்றி இன்னும் தெரியவில்லை. ஆனால் ஜனவரியில் வந்துவிடும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot