கம்ப்யூட்டர் : இதெல்லாம் நம்பாதீங்க மக்களே.!!

By Meganathan
|

பொதுவாக கல்லூரி சேரும் போது தான் நமக்கு கம்ப்யூட்டர் வாங்கி தருவாங்க. சில வீடுகளில் சற்றே முன்பாகவும் வாங்குவது உண்டு, இப்போ அது முக்கியமில்லை. அதனை நாம எப்படி பயன்படுத்துறோம் என்பது தான் முக்கியமான விஷயம்.

என்ன பெருசா பயன்படுத்திட போறோம், ஒரு மணி நேரம் கல்லூரி சம்பந்தமான பயன்படுத்திட்டு மீதி நேரமெல்லாம் ஃபேஸ்புக், யூட்யூப் என நேரத்தை வீணடிப்போம், சிலர் தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவதும் உண்டு, இப்ப இதுவும் முக்கியமில்லை.

புதிதாய் கம்ப்யூட்டர் வாங்கும் போது, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கதையை கூறுவார்கள், இதில் எதை நம்ப வேண்டும், நம்ப கூடாது என்பதை தான் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்..

01

01

பழைய காலத்தில் அதாவது விண்டோஸ் 95 அல்லது 2000 போன்ற இயங்குதளங்களில் அவ்வப்போது டீஃப்ராக்மென்டேஷன் செய்வது நல்லது. ஆனால் இன்றைய விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்கள் தானாகவே டீஃப்ராக்மென்ட் செய்து கொள்ளும் திறன் கொண்டுள்ளன.

02

02

கம்ப்யூட்டர் வேகத்தினை வைரஸ் மற்றும் ஸ்பைவேர் போன்றவைகள் குறைப்பதில்லை, மாறாக உங்களது ரேம் அல்லது, பிராசஸர் போன்றவை கணினியின் வேகத்தை குறைய காரணமாக இருக்கலாம்.

03

03

சமீப காலமாக டாஸ்க் கிளீனர் என்ற மென்பொருளை கம்ப்யூட்டரில் நிச்சயம் இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என்ற தகவல் இணையம் முழுக்க பரவி வருகின்றது. உண்மையில் இது எவ்வித இயங்குதளம் கொண்ட கம்ப்யூட்டருக்கும் தேவை கிடையாது.

04

04

எவ்வித இயங்குதளங்களுக்கும் ஆண்டிவைரஸ் மென்பொருள் நிச்சயம் தேவை. இது ஆபத்தை விளைவிக்கும் தேவையில்லாதவகளை கணினியில் நுழைய விடாமல் பார்த்து கொள்ளும்.

05

05

கணினிகளை அடிக்கடி ஆஃப் செய்வதை விட அதனினை பயன்பாட்டிற்கு ஏற்ப ஸ்லீப் மோடில் போட்டாலே போதுமானது. அடிக்கடி ஆஃப் செய்து ஆன் செய்வதால் பிராசஸர் வேகம் மாற்றப்படும்.

06

06

உங்களது கணினியில் நீங்கள் நிரந்திரமாக அழிக்கும் தரவுகள் ஹார்டு டிஸ்க்கில் இருந்து மறைக்கப்படும், ஆனால் அதன் மூல தரவு அப்படியே தான் இருக்கும்.

07

07

மேக் கணினி தான் சிறந்தது, இல்லை விண்டோஸ் தான் சிறந்தது. உண்மையில் இரண்டு கணினிகளும் சிறப்பானது தான், இவைகளை ஒப்பிடும் போது மேக் கணினிகள் சில பயன்பாடுகளுக்கு சிறப்பானதாக இருக்கின்றது. விண்டோஸ் கணினிகளில் கேமிங் சிறப்பாக இருக்கின்றது.

08

08

நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் க்ரோம், ஃபயர்ஃபாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் போன்றவை ஒரே பயன்களை தான் வழங்குகின்றன. இதில் சிறந்த ப்ரோகிராம் என எதுவுமே கிடையாது. இவைகள் வழங்கும் அம்சங்கள் வித்தியாசமாக இருப்பது மட்டுமே உண்மை.

09

09

சிறப்பான ஹார்டுவேர் இருந்தால் கணினி சிறப்பானதாக இருக்கும் என பலரும் நினைக்கின்றனர். உண்மையில் அதிக கோர் கொண்ட பிராசஸர்கள் சில பணிகளை வேகமாக செய்ய வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் ஒருவரது பயன்பாட்டிற்கு ஏற்ப பிராசஸர் அல்லது ரேமினை தேர்வு செய்தாலே கணினி சிறப்பானதாக இருக்கும்.

10

10

கஸ்டம் பில்ட் கணினி அதாவது, நாமே அனைத்து பாகங்களையும் வாங்கும் போது கணினியின் விலை குறைவாக இருக்கும் என்ற காலம் மலையேறி விட்டது. ஒருவரின் பயன்பாட்டிற்கு ஏற்ப கணினிகளை நேரடியாக வாங்குவதும் நல்லது தான்.

Best Mobiles in India

English summary
Don't believe these myths about your computer Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X