Home
Computer

வீடியோ கேம் பிரியர்களுக்கான புதிய டிஜிட்டல் ஸ்டார்ம் கணினிகள்

By Karthikeyan
வீடியோ கேம் பிரியர்களுக்கான புதிய டிஜிட்டல் ஸ்டார்ம் கணினிகள்

டிஜிட்டல் ஸ்டார்மின் ரசிகர்கள் கொண்டாட வேண்டிய தருணம் இது. ஏனெனில் டிஜிட்டல் ஸ்டார்மின் புதிய கேமிங் கணினிகள் ஐவி பிரிட்ஜ் கொண்டு வருகின்றன. அதனால் வீடியோ கேமிங் அனுபவம் பட்டையைக் கிளப்பும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மேலும் டிஜிட்டல் ஸ்டார்மின் புதிய கேமிங் கணினிகள் இன்ட்ல் 3வது தலைமுறை ப்ராசஸர்களையும் கொண்டு வருகின்றன. அதனால் இந்த கணினிகளின் கடிகார வேகம் 4.8 ஜிஹெர்ட்சாக இருக்கும். அதன் மூலம் டிஜிட்டல் ஸ்டார்ம் தனது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்க இருக்கிறது.

டிஜிட்டல் ஸ்டார்மின் ரசிகர்கள் உலகின் மிகவும் மேம்பட்ட ப்ராசஸர்களைத் தங்களது கணினிகளில் வைத்திருப்பார்கள். இந்த ப்ராசஸர்கள் அவர்களின் டிஜிட்டல் ஸ்டார்ம் கணினிகளுக்கு தாறுமாறான வேகத்தைக் கொடுக்கும்.

இந்த கணினிகளில் உள்ள 22என்எம் ப்ராசஸ் மற்றும் 3டி ட்ரை-ட்ரான்சிஸ்டர்கள் இந்த கணினிகள் இயக்கத்தில் இருக்கும் போது ஏற்படும் வெப்பத்தை கணிசமான அளவு குறைத்துவிடும்.

இந்த டிஜிட்டல் ஸ்டார்ம் கணினிகளில் தங்கு தடையின்றி மிக வேகமாக கேமிங் விளையாடலாம். குறிப்பாக கேமிங் பிரியர்கள் இந்த கணினிகள் மூலம் தங்கள் கேமிங் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்.

ப்ராசஸர்களைத் தவிர்த்து இந்த கணினிகளில் மிகவும் சக்தி வாய்ந்த அதி வேகம் கொண்ட ரேமும் உள்ளது. இதில் சேமிப்பு வசதியும் அதிகமாக இருக்கும். அதுபோல் மல்டி மீடியா வசதிகளும் இந்த கணினிகளில் அபாரமாக இருக்கும். மேலும் இதில் உள்ள ஆடியோ சிஸ்டம் மிகவும் அதிரடியாக இருக்கும்.

அசூர கேமிங் சக்தி கொண்ட இந்த கணினிகளில் விலையும் குறைவாக இருக்கும் என்று டிஜிட்டல் ஸ்டார்ம் நிறுவன அலுவலர்கள் கூறுகின்றனர். வீடியோ கேம் பிரியர்களின் சொர்க்க பூமியாக வரும் இந்த டிஜிட்டல் கணினிகள் இப்போதே பெரிய ஆவலை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X