இணையதளத்தை மிக வேகமாக இயக்கும் புதிய 3ஜி டோங்குள்

Posted By: Staff
இணையதளத்தை மிக வேகமாக இயக்கும் புதிய 3ஜி டோங்குள்
டிஜிசோல் நிறுவனம் சமீபத்தில் அதிவேகம் கொண்ட புதிய எச்எஸ்பிஎ 3ஜி யுஎஸ்பி டோங்குலை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய சாதனம் 7.2 எம்பிபிஎஸ் வேகத்தில் பதிவிறக்கம் செய்யும் சக்தி கொண்டது. இந்த புதிய சாதனத்திற்கு டிஜி-பிஎ3370 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த புதிய சாதனத்தின் மூலம் எந்த நேரத்திலும் இணையதளத்தை இயக்க முடியும். அதோடு இந்த சாதனம் எஸ்எம்எஸ், மாஸ் ஸ்டோரேஜ் மற்றும் போன்புக் ஆகிய வசதிகளையும் கொண்டிருக்கிறது.

இந்த சாதனம் மைக்ரோ எஸ்டி ஸ்லாட்டை கொண்டிருப்பதால் இதில் 32ஜிபி அளவிற்கு தகவல்களை சேமித்து வைக்க முடியும். அதோடு மைக்ரோ எஸ்டி மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தகவல்களை இந்த சாதனத்தில் நேரடியாக சேமித்து வைக்க முடியும்.

இந்த 3ஜி யுஎஸ்பி அடாப்டர் தானாக இன்ஸ்டால் ஆகிவிடும். அதற்காகத் தனியாக ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் தேவைப்படாது. மேலும் இந்த சாதனம் இணையதளத்தை இயக்குவதற்கும் பெரிதும் உறுதுணையாக இருக்கும். மேலும் 500க்கும் மேற்பட்ட தொடர்பு எண்களை இந்த சாதனத்தில் சேமித்து கொள்ளலாம்.

மிக வேகமாக இயங்கும் இந்த சாதனம் எச்எஸ்பிஎ அல்லது யுஎம்டிஎஸ் மற்றும் எச்எஸ்டிபிஎவை சப்போர்ட் செய்கிறது. இந்த சாதனம் ரூ.1,699க்கு விற்கப்பட இருக்கிறது. மேலும் இது ஒரு வருட உத்திரவாதத்துடன் வருகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்