Just In
- 1 hr ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 2 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 3 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 3 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நினைக்கவே முடியாத வடிவமைப்பு மற்றும் செயல்திறனுடன் வெளியான டெல் XPS13 லேப்டாப்.!
டெல் நிறுவனம் XPS13 ல் லேப்டாப் வடிவமைப்பை மாற்றியுள்ளது. உட்புறம் முழுவதும் வெள்ளை நிறத்தில் அதன் பார்வையை முற்றிலும் மாற்றியுள்ளது.
செயல்திறன் மற்றும் வடிலமைப்பு என வரும் போது , இன்னமும் சந்தையில் சிறந்த லேப்டாப்பாக இருக்கிறது டெல் நிறுவனம் வடிவமைத்துள்ள XPS 13 (9370) . அதிக திறன்வாய்ந்த 4k டச் ஸ்கிரீன் வசதி கொண்ட திரை மற்றும் 8ம் தலைமுறை இன்டெல் கோர் i7 இயக்கியுடன் கூடிய சி.பி.யூ வும் சிறப்பம்சமாக உள்ளது. இந்த லேப்டாப்பின் விலை ரூ97,990 லிருந்து துவங்கி அதிகபட்ச விலையாக ரூ1,64,990 உள்ளது.
சிறந்த லேப்டாப்பாக திகழும் XPS வரிசையில், இந்த XPS 13 போட்டியாளர்கள் மத்தியில் மேலும் ஒரு முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இதில் நல்ல விசயம் என்னவென்றால், ஆப்பிள் மேக்புக்கை போல எதுவும் முயற்சி செய்யவில்லை என்பது தான். உண்மையிலேயே இது அதை விட சிறந்த செயல்திறன் வாய்ந்தது.
அதிக திறன்வாய்ந்த 4k டச் ஸ்கிரீன் வசதி கொண்ட திரை, இன்ப்ராரெட் பேஸ் ரெகக்னேசன், பைபர் உலோகத்தால் ஆன வெளிப்புற வடிவமைப்பு, மிக மெல்லிசான திரை போன்றவை டெல் XPS13 லேப்டாப்-ன் நிறைகளாக இருக்கும் அதே வேளையில்,அதன் விலை, வெப்கேம் வைக்கப்படும் இடம், குறைக்கப்பட்ட பேட்டரியின் அளவு போன்றவை குறைகளாக பார்க்கப்படுகிறது.
வடிவமைப்பு
டெல் நிறுவனம் XPS13 ல் லேப்டாப் வடிவமைப்பை மாற்றியுள்ளது. உட்புறம் முழுவதும் வெள்ளை நிறத்தில் அதன் பார்வையை முற்றிலும் மாற்றியுள்ளது. கடந்த தலைமுறை லேப்டாப்களுடன் ஒப்பிடும் போது, இதன் திரை 23%மெல்லியதாக உள்ளது.
டிஸ்ப்ளே
திரையை பொறுத்தமட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயனர் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தொடுதிரை வசதியில்லாத 920 x 1080p HD டிஸ்ப்ளே அல்லது 3840 x 2160 பிக்சல் கொண்ட 4K Ultra HD Infinity Edge டிஸ்ப்ளேவை தேர்வு செய்யலாம். மேலும், 13 இன்ச் திரையான இதில் பிரைட்னஸ் 100% தேவையே இல்லை. மிக பிரகாசமான திரைக்கு பாதிஅளவே போதுமானது.
கீபோர்டு மற்றும் டிரேக் போர்டு
உள்ளீடுகளை சிறப்பாக பெறுவதில் டெல் தான் எப்போதும் டாப். இந்த XPS13 லும் பட்டனைகளுக்கு இடையேயான இடைவெளி , 2 லெவல் பேக் லைட் போன்ற நீண்ட நேரம் டைப் செய்ய வசதியாக இருக்கும்.
அது போல் டிரேக் பேடும், ஓவேன் கண்ணாடியால் ஆனதால், எந்தவித கீறல்களும் ஏற்படா வண்ணம் துல்லியமாக செயல்படும்.
கனெக்டிவிட்டி
அடிபாகத்தின் அளவு 0.46 இன்ச்-ஆக குறைக்கப்பட்டு விட்டதால், டைப் ஏ யூ.எஸ்.பி மற்றும் கார்டு ரீடர் போர்ட்களை நீக்கிவிட்டது. அதற்கு பதிலாக, வலதுபுறத்தில் டைப் சி யூ.எஸ்.பி மற்றும் மைக்ரோ எஸ்.டி கார்டு போர்ட் உள்ளது. கேம் விளையாட வசதியாக 4லேன் பி.சி.ஐ கனெக்சனும் உள்ளது.
செயல்திறன்
டெல் XPS13 லேப்டாப் சிறப்பாக செயல்பட ஏதுவாக 1.80GHz இன்டெல் கோர் i7-8550U இயக்கியுடன் கூடிய சி.பி.யூ வும், 16GB ரேமும் உள்ளது.
இதன் பேட்டரி குறைவாக உபயோகிக்கும் பட்சத்தில் 19மணி நேரம் தாக்குபிடிக்கும் என டெல் நிறுவனம் கூறுகிறது. மேலும் இதன் இன்ப்ராரெட் பேஸ் ரெகக்னேசன் மூலம், லாகின் செய்யும் போது எவ்வித பிரச்சனைகளும் இன்றி சிறப்பாக செயல்படுகிறது.
விலை
இந்த லேப்டாப்பின் விலை ரூ97,990 லிருந்து துவங்குகிறது அதில் i5 இன்டெல் இயக்கி மற்றும் 256GB சேமிப்புதிறன் வசதிகள் உள்ளன.
4K டச் ஸ்கிரீன் திரை,i7 இன்டெல் இயக்கி மற்றும் 512GB சேமிப்புதிறன் கொண்ட லேப்டாப்பின் விலை ரூ.1,64,990 ஆகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470