Dell அறிமுகம் செய்த புதிய லேப்டாப்: விலையை கேட்டா அசந்துருவீங்க!
டெல் நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான லேப்டாப் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஒரு புதிய லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது Dell XPS 13 Plus 9320 மாடலை தற்போது அறிமுகம் செய்துள்ளது டெல் நிறுவனம்.

டெல் எக்பிஎஸ் 13 பிளஸ் 9320 லேப்டாப்
இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டெல் எக்பிஎஸ் 13 பிளஸ் 9320 லேப்டாப் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது
என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இதன் விலை நம்மை அசர வைக்கும் வகையில் தான் உள்ளது. முதலில் இந்தலேப்டாப் மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே
டெல் எக்பிஎஸ் 13 பிளஸ் 9320 லேப்டாப் ஆனது 13-இன்ச் யுஎச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி மற்றும் 4கே பிளஸ் ரெசல்யூசன் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இதன் டிஸ்பிளே உங்களுக்கு ஒரு தனி அனுபவத்தை கொடுக்கும்.

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
அதேபோல் 3840×2400 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டச் ஸ்கிரீன் சப்போர்ட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த டெல் எக்பிஎஸ் 13 பிளஸ் 9320 லேப்டாப். குறிப்பாக 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டு இந்த லேப்டாப்வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சிறந்த பாதுகாப்பு வசதி
டெல் எக்பிஎஸ் 13 பிளஸ் 9320 லேப்டாப் ஆனது விண்டோஸ் 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு blue light குறைக்கும் EyeSafe தொழில்நுட்ப ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய லேப்டாப். இது சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொடுக்கும்.

பிராசஸர் எப்படி?
புதிய டெல் லேப்டாப் மாடல் ஆனது 12-வது ஜென் இன்டெல் கோர் ஐ7-1260 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இதன் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப்.

சூப்பர் கீபோர்ட்
டெல் எக்பிஎஸ் 13 பிளஸ் 9320 லேப்டாப் மாடலில் கைரேகை ரீடருடன் பேக்லிட் கீபோர்டு ஆதரவும் உள்ளது. பின்பு dual-array மைக்குகள், 720 பிக்சல் வெப்கேமரா, குவாட் ஸ்பீக்கர்கள் போன்ற அசத்தலான அம்சங்களுடன் இந்த புதிய லேப்டாப் வெளிவந்துள்ளது.

சூப்பரான ஆடியோ
அதேபோல் Waves MaxxAudio Pro மற்றும் Waves Nx 3D ஆடியோவுடன் ஸ்டுடியோ தர ட்யூனிங்கைக் கொண்டுள்ளது இந்த புதிய டெல் எக்பிஎஸ் 13 பிளஸ் 9320 லேப்டாப். எனவே இந்த லேப்டாப் மாடல் கேமிங் பயனர்களுக்கு ஒரு தனி ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
டெல் எக்பிஎஸ் 13 பிளஸ் 9320 லேப்டாப் மாடல் 50Wh 3-செல் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 60W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மூலம் ஒரு மணி நேரத்திற்குள் 80 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும். அதேபோல் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

கனெக்டிவிட்டி
வைஃபை 6, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி, யுஎஸ்பி-ஏ 3.0 அடாப்டர், 3.5mm ஹெட்செட் அடாப்டர் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெல் எக்பிஎஸ் 13 பிளஸ் 9320 லேப்டாப். அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டெல் நிறுவனம்.

டெல் எக்பிஎஸ் 13 பிளஸ் 9320 லேப்டாப் விலை
இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டெல் எக்பிஎஸ் 13 பிளஸ் 9320 லேப்டாப் மாடலின் ஆரம்ப விலை ரூ.1,59,990-ஆக உள்ளது. பின்பு வரும் ஜூலை 23-ம் தேதி முதல் டெல் இந்தியா வலைதளம் மற்றும் அமேசான் மூலம் இந்த புதிய லேப்டாப் மாடலை வாங்க முடியும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications