இந்தியா : புதிய டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் மாடல் அறிமுகம்(அம்சங்கள்).!

டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் பொறுத்தவரை சினிமா கலர், சினிமா சவுண்ட், சினிமா ஸ்ட்ரீம் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

By Prakash
|

டெல் நிறுவனம் தற்சமயம் அட்டகாசமான டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் எடைப் பொறுத்தவரை வெறும் 1.22 கிலோ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இவற்றைப் பயன்படுத்த மிக அருமையாக இருக்கும். அதன்பின் சிறந்த தொழில்நுட்ப வசதி மற்றும் 4கே அம்சங்கள் இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் பொறுத்தவரை சினிமா கலர், சினிமா சவுண்ட், சினிமா ஸ்ட்ரீம் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது,அதன்பின்பு இந்த லேப்டாப் மாடல் ரோஸ் கோல்ட் மற்றும் ஆல்பைன் வெள்ளை வண்ண வகைகளில் வருகிறது. மேலும் டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் ஏற்கனவே டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கிடைக்கிறது. பிரத்தியேக கடைகள், Croma,, ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் இருந்து பிப்ரவரி 20-ம் தேதி முதல் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

டெல் எக்ஸ்பிஎஸ் 13 சாதனம் பொதுவாக 13-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080×1920 பிக்சல் தீர்மானம் மற்றும் பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.

குவாட்-கோர்:

குவாட்-கோர்:

இந்த லேப்டாப் சாதனம் 8வது தலைமுறை குவாட் -கோர் ஐ5-8250 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 8GB LPDDR3 RAM மற்றும் 256GB PCIe SSD இவற்றில் உள்ளது.

 நடுத்தர மாறுபாடு :

நடுத்தர மாறுபாடு :

நடுத்தர மாறுபாடு பொறுத்தவரை 13-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080×1920 பிக்சல் தீர்மானம் மற்றும் 8வது தலைமுறை குவாட் -கோர் ஐ7-8550 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 16GB LPDDR3 RAM மற்றும் 512GB PCIe SSD இவற்றில் இடமபெற்றுள்ளது.

 உயர் செயல்திறன்:

உயர் செயல்திறன்:

உயர் செயல்திறன் கொண்ட டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் பொறுத்தவரை 13-இன்ச் அல்ட்ரா எச்டி டிஸ்பிளே 2160 × 3840 பிக்சல் தீர்மானம்
மற்றும் 8வது தலைமுறை இன்டெல் கோர் ஐ7-8550 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த லேப்டாப் மாடல் LPDDR3 RAM மற்றும் 512GB PCIe SSD 16GB வழங்குகிறது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

யுஎஸ்பி டைப்-சி, 3.1(ஜென் 1), விண்டோஸ் ஹலோ மற்றும் ஐஆர் கேமரா மூலம் கடவுச்சொல் இல்லாத உள்நுழைவு போன்ற ஆதரவுகளுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது.

விலை:

விலை:

எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் பொறுத்தவரை 13-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் ஐ5-8250 முறையே இதன் விலை 94,790-ஆக உள்ளது, அதன்பின்பு 13-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் குவாட் -கோர் ஐ7-8550 முறையே ரூ.1,41,490-ஆக உள்ளது. மேலும் 13-இன்ச் அல்ட்ரா எச்டி டிஸ்பிளே மற்றும் இன்டெல் கோர் ஐ7-8550 முறையே 1,59,790-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Dell XPS 13 launched in India price features and more; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X