சூப்பரான வெப் கேமராவுடன் வரும் டெல் லேப்டாப்!

By Karthikeyan
|
சூப்பரான வெப் கேமராவுடன் வரும் டெல் லேப்டாப்!

சமீபத்தில் வந்திருக்கும் டெல் வோஸ்ட்ரோ 3750 லேப்டாப் டெல் வோஸ்ட்ரோ 3700 லேப்டாப்பின் மேம்படுத்தப்பட்ட புதிய லேப்டாப். இந்த புதிய மேம்படுத்தப்பட்ட லேப்டாப் பல ஏராளமான வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்த புதிய டெல் லேப்டாப்பின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் இது 17.3 இன்ச் அளவில் டிஸ்ப்ளே கொண்டு இந்த டிஸ்ப்ளே 1600X900 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. கேமராவிற்காக 2 மெகா பிக்சல் எச்டி வெப்காமை இந்த லேப்டாப் கொண்டுள்ளது.

இந்த டெல் லேப்டாப் மெமரிக்காக 6ஜிபி ரேம் மற்றும் 750 ஜிபி எச்டிடி கொண்டிருக்கிறது. அதுபோல் 8 இன் 1 கார்டு ரீடர் ஸ்லாட்டும் இந்த லேப்டாப்பில் உள்ளது.

தகவல்களை மேலாண்மை செய்ய 802.11 பி/ஜி/என், எச்டிஎம்ஐ போர்ட், 3.0 ப்ளூடூத், 2 யுஎஸ்பி 3.0 போர்ட்டுகள் மற்றும் யுஎஸ்பி 2.0 போர்ட்டுகள் போன்ற வசதிகளை இந்த லேப்டாப் வழங்குகிறது. மேலும் எக்ஸ்ப்ரஸ் கார்டு 34 ஸ்லாட், 0/இசட்டா போர்ட், ஹெட்போன், மைக்ரோபோன் ஜாக், விஜிஎ போர்ட் மற்றும் எர்த்நெட் போர்ட் போன்ற வசதிகளும் இந்த லேப்டாப்பில் உண்டு.

மின் திறனிற்காக இந்த லேப்டாப் 6 செல் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இதன் இயங்கு தளம் விண்டோஸ் 7 ஆகும். இதன் சிபியு 2.0 ஜிஹெர்ட்ஸ் வேகம் கொண்ட ஐ7-2630 க்யுஎம் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது.

இந்த புதிய டெல் லேப்டாப் ஸ்பில் தடுப்பு கீபோர்டைக் கொண்டுள்ளது. இதன் திரையில் 2 மெகா பிக்சல் எச்டி வெப்காம் உள்ளது. இந்த கேமரா எச்டி படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும் சக்தி கொண்டது. மேலும் கைரேகைப் பதிவு வசதியும் இந்த லேப்டாப்பில் உள்ளதால் இது ஒரு பாதுகாப்பான லேப்டாப் ஆகும். இந்த லேப்டாப்பின் விலை ரூ.45,000 ஆகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X