இந்திய கணினி சந்தையை ஆக்கிரமிக்க வரும் டெல் லேப்டாப்

Posted By: Staff

இந்திய கணினி சந்தையை ஆக்கிரமிக்க வரும் டெல் லேப்டாப்
டெல் நிறுவனம் தனது மற்றுமொரு புதிய படைப்பான டெல் வோஸ்ட்ரோ 3450 லேப்டாப்பை இந்திய சந்தையில் களமிறக்கி உள்ளது. குறிப்பாக டெல்லின் லேப்டாப்புகளுக்கு இந்தியாவில் எப்போதுமே மோகம் அதிகம். அதனால் இந்தியாவின் கணனி சந்தையின் பாதி அளவை டெல் நிறுவனம் ஆக்கிரமித்திருக்கிறது. மேலும் இந்த புதிய லேப்டாப் டெல் நிறுவனத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் என நம்பலாம்.

டெல் வோஸ்ட்ரோ 3450 லேப்டாப் 14 இன்ச் அகன்ற திரையுடன் வருகிறது. இதன் திரையின் சிறப்பு என்னவென்றால் அது எல்இடி தொழில் நுட்பத்துடன் பேக்லிட் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. அதுபோல் இதன் ரிசலூசன் 1366X768 (டபுள்யுஎக்ஸ்ஜிஎ) ஆகும்.

மேலும் இதன் ப்ராசஸரைப் பார்த்தால் இது இன்டல் கோர் ஐ7-2620எம் 2.70-ஜிஹர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதனால் அதன் செயல் திறன் வலுவாக இருக்கும். இதன் 4ஜிபி டிடிஆர்3 ரேம் மற்றும் 500ஜிபி ஹார்ட் ட்ரைவ் இந்த லேப்டாப்புக்கு மேலும் வலுவூட்டும் என நம்பலாம்.

டெல் வோஸ்ட்ரோ 3450 லேப்டாப்பில் க்ராபிக்ஸ் மிக அருமையாக உள்ளது. அதாவது இது 1ஜிபி இன்டல் எச்டி க்ராபிக்ஸ்/எஎம்டி ரேடியோன் எச்டி 6630எம் கொண்டிருப்பதால் இதில் பக்காவாக க்ராபிக்ஸ் வேலைகளைச் செய்யலாம். மேலும் இது இதில் கடினமான வீடியோ விளையாட்டுகளையும் இதில் விளையாடலாம்.

இதன் கேமாராவைப் பார்த்தால் மிகவும் அருமையாக உள்ளது. மேலும் இது மல்டி யுஎஸ்பி போர்ட்டுகளை வழங்குகிறது. அதாவது 2எக்ஸ் யுஎஸ்பி 3.0, 1எக்ஸ் யுஎஸ்பி/இசாட்டா கோம்போ மற்றும் 1எக்ஸ் எச்டிஎம்ஐ யுஎஸ்பி போர்ட்டுகளை வழங்குகிறது. அதனால் எல்லா வகையான டிவைஸ்களையும் இதில் இணைக்க முடியும்.

அதேபோல் தகவல் பகிர்விற்காக வயர்லஸ் லேன் மற்றும் வயர்லஸ் நிக்: இன்டல் சென்ட்ரினோ வயர்லஸ்-என் 1030ஐ வழங்குகிறது. இதன் ப்ளூடூத்தும் மிக அருமையாக உள்ளது. மேலும் இதன் 6-செல் (48டபுள்யுஎச்ஆர்) லித்தியம் லோன் பேட்டரி இந்த லேப்டாப்புக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும். மேலும் இந்த டெல் வோஸ்ட்ரோ 3450 6இன் ஒன் கார்டோடு வருகிறது.

32 பிட் விண்டோஸ் 7 கொண்ட இந்த வோஸ்ட்ரோ 3450 லேப்டாப் ரூ.65,990க்கு கிடைக்கும். இதன் விலை அதிகமாக இருந்தாலும் மிகவும் தகுதியான ஒன்றே.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot