13.3-இனச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப்.!
டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் பொறுத்தவரை கண்ணாடி ஃபைபர் பூச்சு கொண்ட வெள்ளை மற்றும் ரோஜா தங்க நிறத்தில் ஒரு புதிய சேஸ் கொண்டுள்ளது.
டெல் நிறுவனம் தற்சமயம் புதிய டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லேப்டாப் பொறுத்தவரை நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் பொறுத்தவரை கண்ணாடி ஃபைபர் பூச்சு கொண்ட வெள்ளை மற்றும் ரோஜா தங்க நிறத்தில் ஒரு புதிய சேஸ் கொண்டுள்ளது. இந்த சாதனம் " "GORE வெப்ப காப்பு" கொண்டுள்ளது, அதன்பின் சிலிக்கா ஏரோஜெல்ஸ் ஹைடெக் சயின்ஸ் மற்றும் தீவிர பொறியியல் சூழல்களில் பயன்படுத்தப்பட்டு வெப்பத்தைத் திசைதிருப்பவும் அகற்றவும் பயன்படுகிறது.

13.3-இனச் டிஸ்பிளே:
டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் மாடல் பொறுத்தவரை 13-இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது, அதன்பின்பு
மெல்லிய பெசல்ஸ் வடிவமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

க்வாட்-கோர்
இந்த சாதனம் க்வாட்-கோர் எட்டாவது தலைமுறை இன்டெல் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எப்எச்டி மற்றும் 4கே டச் டிஸ்பிளே வடிவமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கிராபிக்ஸ் :
டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் சாதனம் பொதுவாக இன்டெல் யுஎச்டி கிராபிக்ஸ் 620 இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16ஜிபி ரேம் மற்றும் 1 TB PCIe SSD வரை ஆதரிக்கிறது.

இணைப்பு ஆதரவுகள்:
யுஎஸ்பி டைப்-ஏ, யுஎஸ்பி டைப்-சி, எச்டிஎம்ஐ போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் சாதனம் வெளிவந்துள்ளது.

குரல் அங்கீகாரம்:
இந்த லேப்டாப் சாதனத்தில் கார்டனா குரல் அங்கீகாரம் மற்றும் அகச்சிவப்பு கேமரா, விருப்பமான கைரேகை ரிடர் மேலும் பல்வேறு அம்சங்களுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது.

விலை:
இன்று முதல் டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் மாடல் அமெரிக்காவில் கிடைக்கும் இவற்றின் விலைமதிப்பு 999டாலர்கள், இந்திய விலை
மதிப்பில் ரூ.63,336-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications