செயல் திறனில் பின்னும் புதிய டெல் அல்ட்ராபுக்!

Posted By: Karthikeyan
செயல் திறனில் பின்னும் புதிய டெல் அல்ட்ராபுக்!

டெல் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய அல்ட்ராபுக் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய லேப்டாப்புக்கு எக்ஸ்பிஎஸ் 14 அல்ட்ராபுக் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப் ரூ.82,990க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.

இந்த எக்ஸ்பிஎஸ் லேப்டாப் சூப்பரான டிசைனில் இருப்பதோடு இது உயர்ந்த செயல் திறனைக் கொண்டிருக்கும். எனவே இவற்றை இயக்குவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும் என்று டெல் இந்தியாவின் பொது மேலாளர் திரு. மகேஷ் பல்லா கூறுகிறார்.

இந்த புதிய லேப்டாப் அலுமினிய தகட்டால் செய்யப்பட்டுள்ளது. 14 இன்ச் திரை, பேக்லிட் கீபோர்டு ஆகியவற்றுடன் வரும் இந்த லேப்டாப் 10 மணி நேர இயங்கு நேரத்தைக் கொண்டிருக்கிறது.

இந்த எக்ஸ்பிஎஸ் லேப்டாப் 500ஜிபி ஹார்ட் ட்ரைவ் மற்றும் 32ஜிபி எம்சட்டா கார்டு கொண்டிருப்பதால் இதில் ஏராளமான தகவல்களைச் சேமித்து வைக்க முடியும். மேலும் இந்த லேப்டாப் இன்டல் ரேபிட் ஸ்டார்ட் மற்றும் ஸ்மார்ட் ரெஸ்பான்ஸ் போன்ற தொழில் நுட்பங்களுடன் வருகிறது. அதனால் இந்த லேப்டாப்பின் பூட்டிங் மிக வேகமாக இருக்கும். மேலும் இந்த லேப்டாப் தாறுமாறான வேகத்துடன் இயங்கும் சக்தி கொண்டது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot