டெல் நிறுவனத்தின் புதிய டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரில் உள்ள வசதிகள்

By GizBot Bureau
|

டெல் நிறுவனம் தற்போது புதியதாக ஆப்டிபிளக்ஸ் ஆல் இன் ஒன்ஸ் மற்றும் ஆப்டிபிளக்ஸ் ஃபேமிலி டவர்ஸ் என்ற புதிய டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. 8வது தலைமுறைக்கான இண்டெல் பிராஸசர்கள் இந்த புதிய கம்ப்யூட்டர்களில் இருப்பதால் தொழிலதிபர்களுக்கு மிகச்சிறந்த வகையில் உதவி அவர்களுடைய தொழிலை அபிவிருத்தி செய்யும்

டெல் நிறுவனத்தின் புதிய டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரில் உள்ள வசதிகள்

இந்த ஆண்டின் துவக்கத்தில் ஏற்கனவே டெல் நிறுவனம் புதிய டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் இந்த கம்ப்யூட்டரின் டிசைன் அனைத்து தரப்பு தொழிலதிபர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்திருந்ததூ.

அந்த வகையில் உலகின் மிகச்சிறந்த, பாதுகாப்பான, அதிநவீன அவ்சதிகள் கொண்ட டெல் நிறுவனத்தின் இந்த புதிய கம்ப்யூட்டர்கள் அமைந்துள்ளது. இதன் ஸ்மார்ட் டிசைன், உற்பத்தி திறன் மற்றும் உபயோகத்திறன் ஆகியவற்றால் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி ஆப்டிபிளக்ஸ் பொருட்களின் விவரங்கள் குறித்து பார்ப்போம்

ஆப்டிபிளக்ஸ் 7760 ஏஐஒ என்பது 27 இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் மற்றும் ஆப்டிகல் ஃப்ரீ 4K அல்ட்ரா எச்டி மற்றும் எச்.ஆர்.டி கொண்ட டச் டிஸ்ப்ளேவை கொண்டது. இதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் குவாட் மை ஆகியவற்றின் உதவியால் 12 அடி தூரத்தில் இருந்தாலும் அதன் சத்தம் நமக்கு கேட்கும். இதில் 80 பிளஸ் இண்டர்னல் பவர் சப்ளை யூனிட் உள்ளது. மேலும் 200W ஈபிஏ பிளாட்டினம் கொண்ட எச்டி கிராபிக்ஸ் 630 உள்ளது. மேலும் இதில் 4ஜிபி, ஜிடிஎக்ஸ்1050 தன்மையும் உண்டு

ஆப்டிபிளக்ஸ் 7460 ஏஐஒ மாடலில் 23.8 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது இதன் மூலம் ஸ்க்ரீன் ஸ்பேஸ் எட்ஜ் டு எட்ஜ் வசதியாக இருப்பதோடு முழுமையான எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே டெக்னாலஜி கிடைக்கும். மேலும் 2.5 இன்ச் 2 டிபி 5400 ஆர்பிஎம் சாட்டா ஹார்ட் டிஸ்க் டிரைவ், இண்டெல் ஆப்டென் மெமரி 16 ஜிபி, மற்றும் டூயல் ஸ்ட்ரோஜெ ஆகியவை இதில் உண்டு. மேலும் இந்த சாதனத்தில் 2.0 எம்பி 1080பி, பாப் அப் வெப் கேமிரா ஆகியவையும் உண்டு

ஆப்டிபிளக்ஸ் டவ்ர் என்பதில் மைக்ரோ டெக்ஸ்டாப் கொண்ட ஒரு எட்டாவது தலைமுரையின் இண்டெல் கோர் பிராஸசர்களை கொண்டது. மேலும் இதில் 64 ஜிபி டிடிஆர்4 மெமரி வசதி இருப்பது கூடுதல் சிறப்பு. ஆப்டிபிளக்ஸ் எக்ஸ் ஈ 3,வசதியும் இதில் உண்டு. இதனால் இந்த சாதனம் தொழிலதிபர்களுக்கு மிகவும் உபயோகவுள்ளதாகவும்ம், துல்லியமாக கணக்கிடவும் உதவும்.

உங்கள் மூளை சமிங்கையாலே கணினி மவுஸ் இயக்க உதவும் கைபேண்ட்.!உங்கள் மூளை சமிங்கையாலே கணினி மவுஸ் இயக்க உதவும் கைபேண்ட்.!

மேலும் தொழிலதிபர்களுக்கு தேவையான ஹெல்த்கேர், ரீடெயில், உற்பத்தி திறன், ஆகியவை அம்சங்கள் கிடைக்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள எக்ஸ் ஈ 3 என்பது தட்பவெப்ப நிலை, ஷாக் அடிக்காத வகையில் சிறப்பு தன்மை மற்றும் தூசுகள் உட்புகாவாறான வசதி ஆகியவை உள்ளது.

ஆப்டிபிளக்ஸ் 7060 மற்றும் 5060 டவர் என்பதும் ஒரு மைக்ரோ டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர் ஆகும். இதில் உள்ள பவர்புல் தன்மையால் எளிதில் நமது பணிகளை செய்யும் வகையில் அடுத்த ஜெனரேஷன்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் இண்டல் எச்டி, டூயல் ஏஎம்டி ராடன், கிராபிக்ஸ் வசதி ஆகியவை இருப்பதால் ஒரே நேரத்தில் மூன்று மானிட்டர்கள் மூலம் வேலை செய்யலாம். மேலும் இந்த சாதனத்தை பயன்படுத்துவதால் எந்தவித உடல்குறைகளும் வராதவகையில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆப்டிபிளக்ஸ் 3060 என்ற டெக்ஸ்டாப் சாதனம் ஒரு எளிய சிஸ்டம் ஆகும். ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தில் 32ஜிபி டிடிஆர்4 மெமரி உள்ளது. இதன் டிசைன் மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளதால் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

மேலும் டெல்டா செக்யூரிட்டியுடன் கூடிய டிபிஎம் 2.0 தன்மை உள்ளது என்பது கேபிள்கள் லாக் செய்யப்பட்ட கவரில் உள்ளதும் ஒரு பாதுகாப்பான அம்சங்கள் ஆகும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Dell has announced the launch of a new family of OptiPlex All-in-Ones (AIO) and OptiPlex Family Towers.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X