4கே யுஎச்டி டிஸ்பிளேவுடன் டெல் இன்ஸ்பிரான் 15 7000 கேமிங் லேப்டாப் அறிமுகம்.!
இன்ஸ்பிரான் 15 7000 கேமிங் லேப்டாப் பொதுவாக 15.6-இன்ச் 4கே யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080)பிக்சல் தீர்மானம் இவற்றுள்ள அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்ஸ்பிரான் 15 7000 கேமிங் லேப்டாப் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது டெல் நிறுவனம், மேலும் இந்த லேப்டாப் மாடல் பொறுத்தவரை சில ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல் இன்ஸ்பிரான் 15 7000 கேமிங் லேப்டாப் பொறுத்தவரை டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இந்த கேமிங் லேப்டாப் மாடலில் இடம்பெற்றுள்ளது. ஏஐஒ பிரிவில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

டிஸ்பிளே:
இந்த இன்ஸ்பிரான் 15 7000 கேமிங் லேப்டாப் பொதுவாக 15.6-இன்ச் 4கே யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்
(1920-1080)பிக்சல் தீர்மானம் இவற்றுள்ள அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்டெல் கோர்:
இந்த இன்ஸ்பிரான் லேப்டாப் பொறுத்தவரை என்விடியா ஜியிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1060 டிஸ்க்ரீட் ஜிபியு மற்றும் என்விடியா மேக்ஸ்-க்யு
டிசைன் டெக்னாலஜி இணைந்து இன்டெல் கோர் ஐ7 க்வாட்-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
இக்கருவியில் பொதுவாக தண்டர்போல்ட்3, யுஎஸ்பி 3 போர்ட், யுஎஸ்பி 3.1, ஜெனரல் 2, டைப்-சி, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

நிறங்கள்:
டெல் இன்ஸ்பிரான் 15 7000 கேமிங் லேப்டாப் பொறுத்தவரை மேட் பிளாக் அல்லது பெய்ஜிங் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயங்குதளம்:
இந்த டெல் இன்ஸ்பிரான் 15 7000 கேமிங் லேப்டாப் பொதுவாக விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவற்துள்ளது.

விலை:
இக்கருவியின் விலை பொறுத்தவரை ரூ.1,27,390-ஆக உள்ளது, மேலும் இவற்றின் புகைபடங்கள் மற்றும் பல தகவல்கள் ஆன்லைனில்
வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications