இந்தியா வரும் டெல் கலக்கல் லேப்டாப்

டெல்லின் லாட்டிடியூட் லேப்டாப்புகள் அனைத்தும் வெற்றியை கொடுத்துள்ளன.அதே போல் இந்த புதிய லாட்டிடியூட் எக்ஸ்டி3 லேப்டாப்பும் டெல்லுக்கு வெற்றியை அளிக்கும் என நம்பலாம். இந்த லேப்டாப் எல்இடி பேக்லிட் கொண்டு இருப்பதால் நமக்கு க்ளேர் அடிக்காது.
இது இண்டலின் 2ஜி கோர் ஐ5 ப்ராசஸர் கொண்டு 2ஜிபியுடன் கூடிய டர்போ பூஸ்ட் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. மேலும் இதன் மற்ற கன்பிகரேஷன்களை எடுத்துக் கொண்டால் இது 1333 மெகாஹெர்ட்ஸ் டிடிஆர்-3 எஸ்டிஆர்எஎம் உடன் வைமாக் மற்றும் மொபைல் ப்ராண்டும் பெற்றுள்ளது.
இதன் மின்திறன் அனாசயமான சக்தியைக் கொண்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்குள் இதன் பேட்டரி 80% ஜார்ஜைப் பெற்றுவிடும். மேலும் இந்த லேப்டாப்பில் 9 செல்களைப் போடலாம் மற்றும் இது ஒரு நாள் முழுவதும் தாங்கும் சக்தியைக் கொண்டது. அடுத்ததாக லாட்டிடியூட் எக்ஸ்டி3ஐ எந்தவித சிரமமும் இல்லாமல் எளிதாக டேப்லட் மோடுக்கு மாற்றிவிடலாம். மேலும் இதன் திரையை சுழலச் செய்வதற்கான பை டைரக்ஷன் வசதியும் உள்ளது. இதனால் எந்த திசையிலும் எளிதாக இதன் திரையை எளிதாக திருப்ப முடியும்.
இதன் திரை தானாகவே வெளிச்சத்திற்கு ஏற்றார் போல் மாறிக்கொள்ளும் வசதி கொண்டது. அதாவது குறைந்த வெளிச்சமாக இருந்தாலும் அல்லது அதிக வெளிச்சமாக இருந்தாலும் அதற்கேற்றார் போல் சரியான வெளிச்சத்தைக் கொடுக்கும். மேலும் இதில் டச் பேட் மற்றும் மவுஸ் ஆகியவற்றோடு போர் பிங்கர் மல்டி டச் வசதியும் உள்ளது. அதோடு இதில் வைமாக்ஸ் மற்றும மொபைல் ப்ராண்ட் உள்ளதால் நெட்வொர்க் அக்சஸ் மிக வேகமாக இருக்கும். மேலும் தகவல்களைப் பாதுகாப்பதற்கான வசதிகளும் இந்த லேப்டாப்பில் அதிகமாக உள்ளன.
லாட்டிடியூட் எக்ஸ்டி3 மேக்னீசியம் அலாயால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதன் கீபோர்டுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாத வகையில் அதற்கு ஸ்பில் ரெஸிஸ்டன்ட் வசதியும் உள்ளது. இறுதியாக இதன் விலையை எடுத்துக் கொண்டால் இந்தியாவில் ரூ.1,00,000க்கு கிடைக்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications