ஏழரை மணிநேர பேட்டரி பேக்கப்புடன் புதிய டெல் லேப்டாப்!

Posted By: Karthikeyan

ஏழரை மணிநேர பேட்டரி பேக்கப்புடன் புதிய டெல் லேப்டாப்!

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் டெல் லாட்டிட்யூட் இ6220 ஒரு சிறிய மற்றும் உறுதியான லேப்டாப் என்று கூறலாம். முதல் பார்வையில் இந்த லேப்டாப் கவரக்கூடிய விதத்தில் இல்லை என்றாலும் இதன் செயல் திறன் அட்டகாசமாக இருக்கிறது.

டெல் லாட்டிட்யூட் இ6220 லேப்டாப்பின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் அது 1366 x 768 பிக்சல் ரிசலூசன் கொண்ட 12.5 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. அதுபோல் 128 ஜிபி கொண்ட சாலிட் ஸ்டேட் டிரைவையும் இது உள்ளடக்கியுள்ளது.

இதன் ப்ராசஸரை எடுத்துக் கொண்டால் அது இன்ட்ல் கோர் ஐ5 – 2540 ப்ராசஸர் அல்லது ஐ7 – 2630எம் ப்ராசஸரைக் கொண்டிருக்கும். இதன் மொத்த மெமரி 4 முதல் 8 ஜிபி வரை ஆகும். அதுபோல் க்ராபிக்ஸ் வேலைகளுக்காக இன்டக்ரேட்டட் எச்டி 3000 க்ராபிக்ஸ் ப்ராசஸிங் யுனிட்டைக் கொண்டுள்ளது. மேலும் 1080பி வீடியோ ப்ளேபேக்கும் உள்ளது.

இந்த டெல் லேப்டாப்பின் பேட்டரி 7.30 மண நேரி இயங்கு நேரத்தை அளிக்கிறது. இந்த லேப்டாப்பின் மொத்த எடை 1.7 கிலோவாகும். அதுபோல இது விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இயங்குகிறது.

இணைப்பு வசதிகளைப் பார்த்தால் இஎஸ்எடிஎ/யுஎஸ்பி கோம்போ போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட்டுகள், எச்டிஎம்ஐ போர்ட், ஜிகாபிட் எர்த்நெட் மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகளை இது தாங்கி வருகிறது. மேலும் எக்ஸ்பிரஸ் கார்டு ஸ்லாட், வெப்காம் மற்றும் ஹெட்போன் ஜாக் போன்றவை இந்த லேப்டாப்பை மெருகு ஏற்றுகின்றன.

இந்த டெல் லாட்டிட்யூட் இ6220 லேப்டாப்பை முதலில் பார்க்கும் போது ஒரு குழப்பம் இருக்கும். ஏனெனில் இது உருவத்தில் நெட்புக்கைவிட சிறியதாக இருக்கிறது. ஆனால் மற்ற சாதாரண லேப்டாப்புகளைவிட இதன் செயல் திறன் பட்டையைக் கிளப்பி விடும். இதன் கீபோர்டு மிக அட்டகாசமாக இருக்கிறது.

மேலும் இந்த லேப்டாப்பில் அதிக உயர் திறன் கொண்ட பேட்டரியை தேவைப்பட்டால் பொருத்திக் கொள்ளலாம். இந்த டெல் லேப்டாப்பின் விலை ரூ.75,000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot