15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே டெல் லேப்டாப் அறிமுகம்.!

|

சர்வதேச சந்தையில் டெல் நிறுவனத்தின் லேட்டிடியூட் 9000 சீரிஸ் புதிய லேப்டாப் லேட்டிடியூட் 9510மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

லேட்டிடியூட் 9510 லேப்டாப்

லேட்டிடியூட் 9510 லேப்டாப்

டெல் நிறுவனத்தின் லேட்டிடியூட் 9510 லேப்டாப் மாடல் 15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.இது 14-இன்ச் நோட்புக் அளவிலும் கிடைக்கிறது. இதன் 2 இன் 1 வேரியண்ட்டிலும் தொடுதிரை வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய லேப்டாப்பில் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

 5ஜி ஆன்டெனாக்கள்

5ஜி ஆன்டெனாக்கள்

மேலும் இந்த புதிய லேப்டாப் மாடலில் இன்டெல் வைஃபை6 மற்றும் 5ஜி மொபைல் பிராட்பேண்ட் வசதியும்சேர்க்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 5ஜி ஆன்டெனாக்கள் முன்புற ஸ்பீக்கர்களில் பொருத்தப்பட்டுள்ளது. இது லேப்டாப்அதிக தடிமனாக இல்லாமல், மெல்லியதாக இருக்க வழி செய்திருக்கிறது. குறிப்பாக இதனுடன் கார்பன் பிளேடுஃபோன்களும் டூயல் ஹீட் பைப்களும் வழங்கப்பட்டுள்ளது.

பலே திட்டம்: CAA ஆதரவுக்கு ஒரே மிஸ்டு கால்., ஆதரவு திரட்டும் பாஜக- இதுதான் அந்த எண்...பலே திட்டம்: CAA ஆதரவுக்கு ஒரே மிஸ்டு கால்., ஆதரவு திரட்டும் பாஜக- இதுதான் அந்த எண்...

இன்டெலிஜண்ட் ஆடியோ

இன்டெலிஜண்ட் ஆடியோ

டெல் நிறுவனத்தின் இந்த லேப்டாப் சாதனத்தில் ஆம்ப் மற்றும் நான்கு வாய்ஸ் கேன்சலிங் மைக்ரோபோன்களைகொண்டிருக்கிறது. இதுதவிர இன்டெலிஜண்ட் ஆடியோ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது கான்ஃபெரன்ஸ்
அழைப்புகளின் போது ஆடியோ தரத்தை மேம்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

35சதவிகிதம்

35சதவிகிதம்

டெல் லேட்டிடியூட் 9510 மாடலில் மிகவும் எதிர்பார்த்த எக்ஸ்பிரஸ்சார்ஜ் பூஸ்ட் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, இது
லேப்டாப்பை 35சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 20நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. பின்பு இதில் மெஷின்டு அலுமினியம் ஃபினிஷ் மற்றும் டைமண்ட் கட் எட்ஜ்கள் வழங்கப்பட்டுள்ளன.

1799டாலர்கள்

1799டாலர்கள்

இந்த புதிய டெல் லேப்டாப்-ன் விற்பனை வரும் மார்ச்-26-ம் தேதி துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் விலை 1799டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Dell Latitude 9510 laptop comes with 5G and built-in AI : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X