இந்தியா: வியக்கவைக்கும் விலையில் டெல் நிறுவன்தின் 6 புதிய லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.!

|

டெல் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது.

 சிறந்த மென்பொருள் வசதி

சிறந்த மென்பொருள் வசதி

தற்சமயம் இந்நிறுவனம் டெல் எக்பிஎஸ் 13, டெல் இன்ஸ்பிரான் 14, டெல் எக்பிஎஸ் 15, டெல் இன்ஸ்பிரான் 7391, டெல் ஜி3 மற்றும் டெல் ஏலியன்வேர் என ஆறு லேப்டாப் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனங்கள் அனைத்தும் சிறந்த மென்பொருள் வசதிகளுடன் வியக்கவைக்கும் விலையில் வெளிவந்துள்ளது.

டெல் எக்பிஎஸ் 13: XPS 13 (7390)

டெல் எக்பிஎஸ் 13: XPS 13 (7390)

டெல் எக்பிஎஸ் 13(7390) மாடல் 2-இன்-1 நோட்புக் போன்று பயன்படுத்த முடியும், குறிப்பாக 4கே டிஸ்பிளே ஆதரவுடன்இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் 10-வது ஜென் இன்டெல் பிராசஸர், கோர் ஐ7 ஆதரவு, யுஎஸ்டி கிராபிக்ஸ்,
16GB LPDDR4x ரேம் மற்றும் 521ஜிபி உள்ளடக்க மெமரி என பல்வேறு அம்சங்கள் இதனுள் அடக்கம். குறிப்பாகதண்டர்போல்ட் 3 போர்ட்கள், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக், உள்ளிட்ட பல்வேறுஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கட் மேலும் 4-செல் 51வாட் பேட்டரி அமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
பின்பு இந்த சாதனத்தின் விலை மதிப்புரூ.1,13,990-ஆக உள்ளது.

நீண்ட கால பிளான்: இலவசத்தை அள்ளி வீசி தெறிக்கவிட்ட டிஷ் டிவி, டி2எச்.!நீண்ட கால பிளான்: இலவசத்தை அள்ளி வீசி தெறிக்கவிட்ட டிஷ் டிவி, டி2எச்.!

டெல் எக்ஸ்பிஎஸ் 15: XPS 15 (7509)

டெல் எக்ஸ்பிஎஸ் 15: XPS 15 (7509)

டெல் எக்ஸ்பிஎஸ் 15 (7509) சாதனம் பொதுவாக 15-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே மற்றும் இனிபினிட்டி எட்ஜ் டெக்னாலாஜிவடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 10-வது ஜென் இன்டெல் கோர் பிராசஸர் என்விடியா ஜியிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1650 ஜிபி ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக 3ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை சேமிப்பு ஆதரவு
கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல். பின்பு யூ.எஸ்.பி 3.1 போர்ட்கள், தண்டர்போல்ட் 3 போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.இந்த சாதனத்தில் 6-செல் 97வாட் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. டெல் எக்ஸ்பிஎஸ் 15 லேப்டாப் மாடலை ரூ.1,66,990-விலையில் வாங்கலாம்.

 டெல் இன்ஸ்பிரான் 14:  Inspiron 14 (5490/5590)

டெல் இன்ஸ்பிரான் 14: Inspiron 14 (5490/5590)

டெல் இன்ஸ்பிரான் 14 (5490/5590) சாதனம் பொதுவாக 14-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 10-வது ஜென் இன்டெல் பிராசஸர் என்விடியா ஜியிபோர்ஸ் MX250 GPU மென்பொருள் அமைப்பைக் கொண்டுள்ளது, இந்த சாதனம். குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை சேமிப்பு கொண்டு வெளிந்துள்ளது இந்த லேப்டாப். மேலும் எச்.டி.எம்.ஐ போர்ட், தண்டர்போல்ட் 3.0 போர்ட், இரட்டை யூ.எஸ்.பி 3.1 போர்ட்கள், ஒற்றை யூ.எஸ்.பி 2.0 போர்ட், மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். டெல் இன்ஸ்பிரான் 14 (5490) சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.57,990-ஆக உள்ளது. இன்ஸ்பிரான் 14 (5590) சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.41,990-ஆக உள்ளது.

Ubon CL-60 வயர்லெஸ் இயர்போன்ஸ் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்!Ubon CL-60 வயர்லெஸ் இயர்போன்ஸ் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்!

டெல் இன்ஸ்பிரான் 2-இன்-1  (7391)

டெல் இன்ஸ்பிரான் 2-இன்-1 (7391)

டெல் இன்ஸ்பிரான் 2-இன்-1 (7391) சாதனம் 13.3-இன்ச் டச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது, குறிப்பாக 10-வது ஜென் இன்டெல் பிராசஸர் உடன் என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ் 250 அல்லது இன்டெல் யுஎச்.டி கிராபிக்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் 8ஜபி ரேம் மற்றும் 1டிபி வரை சேமிப்பு இவற்றுள் அடக்கம்.பின்பு தண்டர்போல்ட் 3.0 போர்ட், எச்.டி.எம்.ஐ போர்ட்,யூ.எஸ்.பி 3.1 போர்ட், மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் உள்ளிட்ட
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 4-செல் 52வாட் பேட்டரி ஆதரவு கொண்டு இத்த லேப்டாப் மாடல்வெளிவந்தள்ளது. இந்த சாதனத்தின் ஆரம்ப விரை ரூ.86,890-ஆக உள்ளது.

 டெல் ஜி3 (3590)

டெல் ஜி3 (3590)

டெல் ஜி3 (3590) லேப்டாப் மாடல் 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கேமிங் வசதிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புஆர்ஜிபி கீபோர்டு ஆதரவு மற்றும் இன்டெல் மற்றும் என்விடியா மென்பொருள் அமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடலின் ஆரம்ப விலை ரூ.70,990-ஆக உள்ளது.

டெல்  ஏலியன்வேர் எம்15

டெல் ஏலியன்வேர் எம்15

டெல் ஏலியன்வேர் எம்15 கேமிங் லேப்டாப் மாடல் பொதுவாக 15.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே மற்றும் 9-வது ஜென்இன்டெல் கோர் ஐ7 ஆதரவு மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும்
1டிபி வரை சேமிப்பு இவற்றில் அடக்கம். 4-செல் 52வாட் பேட்டரி அமைப்பு கொண்டுள்ளது இந்த ஏலியன்வேர் எம்15லேப்டாக். மேலும் ரூ.1,88,490-விலையில் இந்த சாதனத்தை வாங்க முடியும்இ

Best Mobiles in India

English summary
Dell Introduced new Laptops in India: Price, Specifications and Other Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X