புதிய டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை களமிறக்க டெல் ஆயத்தம்

Posted By: Staff

புதிய டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை களமிறக்க டெல் ஆயத்தம்
டெல்லின் புதிய இன்ஸ்பைரோன் ஒன் 2310 மேசை கணினியைப் பற்றிய தகவல்கள் பரவலாக இணைய தளங்களில் வெளிவருகின்றன. இந்த புதிய மேசை கணினி இந்த வருட இறுதியில் சந்தைக்கு வரவிருக்கிறது. இந்த டெல்லின் புதிய இன்ஸ்பைரோன் ஒன் 2310 மேசை கணினியில் எல்லா வசதிகளையும் நாம் அனுபவிக்கலாம். இந்த கணனி தொடுதிரை வசதியை வழங்குகிறது.

டெல்லின் புதிய இன்ஸ்பைரோன் ஒன் 2310 மேசை கணினி 23 இன்ச் மல்டி டச் திரை கொண்டு கோர்5 சிபியு கொண்டுள்ளது. மேலும் இது ரேடியோன் க்ராபிக்ஸ் மற்றும் ப்ளூ-ரே வசதியையும் உள்ளடக்கியிருக்கிறது. இதன் திரை எச்டி வசதி கொண்டது. அதுபோல் தொடு வசதியும் கொண்டது. இந்த மேசை கணனியில் குடும்பத்தோடு படம் பார்ப்பது புதிய அனுபவத்தைத் தரும். இதன் திரையின் பருமன் 68 மிமீ ஆகும்.

டெல்லின் புதிய இன்ஸ்பைரோன் ஒன் 2310 மேசை கணினி முன் பக்கம் கருப்பு க்ளாசி நிறத்தில் உள்ளது. அது பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. மேலும் இது வயர்லஸ் மவுஸ் மற்றும் கீபோர்டை வழங்குகிறது. குறிப்பாக டெல்லின் புதிய இன்ஸ்பைரோன் ஒன் 2310 மேசை கணினி இண்டல் கோர் ஐ3 மற்றும் ஐ5 ப்ராசஸர் கொண்டு வரும்.

ஆனால் வாடிக்கையாளர்கள் விரும்பினால் ஒரு வாரத்தில் இன்டல் கோர் ஐ7 ப்ராசஸர் வழங்கப்படும். இது 2ஜிபி ரேம் கொண்டுள்ளது. இதை 8ஜிபி வரை அதிகரிக்க முடியும். மேலும் இது 1.0 டிபி வரை விரிவுபடுத்தக் கூடிய 500ஜிபி எஸ்எடிஎ 3.0 கொண்டுள்ளது.

டெல்லின் புதிய இன்ஸ்பைரோன் ஒன் 2310 மேசை கணினி என்விடியா ஜிஇ போர்ஸ் ஜிடி525எம் கொண்டிருப்பதால் இதில் வீடியோ கேம் வசதியை நன்றாக அனுபவிக்க முடியும். மேலும் இது ப்ளூ-ரே கோம்போ ட்ரைவ் கொண்டிருப்பதால் நாம் ப்ளூ-ரே படங்களைப் பார்த்து மகிழ முடியும்.

மேலும் இது ஜேபிஎல் இன்டர்னல் ஸ்பீக்கர்களை வழங்குவதால் இதன் ஒலி அமைப்பும் மிக பிரமாதமாக இருக்கும். அடுத்ததாக இது டிவி ட்யூனர் கொண்டிருப்பதால் டிவி நிகழ்ச்சிகளை பதிவு செய்து பின் பார்க்க முடியும். இதன் விலையைப் பார்த்தால் ரூ.47,000மாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot