Home
Computer

அதிவேக செயல்திறனுடன் புதிய டெல் லேப்டாப்!

By Super

அதிவேக செயல்திறனுடன் புதிய டெல் லேப்டாப்!
புதுமையான தொழில் நுட்பங்களை முந்தித் தருவதில் டெல் நிறுவனம் எப்போதுமே முன்னனியில் நிற்கும். தற்போது டெல் புதுமையான தொழில் நுட்பம் கொண்ட புதிய டெல் இன்ஸ்பைரான் என்5050 என்ற லேப்டாப்பை களமிறக்குகிறது. இதில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன.

இந்த டெல் இன்ஸ்பைரான் என்5050 லேப்டாப்பில், விண்டோஸ் 7 ஹோம் பேசிக் எஸ்பி1 64-பிட் இயங்கு தளத்தைக் கொண்டுள்ளது. அதுபோல் 2ஜி இன்டல் கோர் ஐ3-2350எம்/ஐ5-2450எம் ப்ராசஸர் கொண்டுள்ளது. அதோடு இன்டல் எச்எம்67 எக்ஸ்ப்ரஸ் சிப்செட்டையும் கொண்டுள்ளது.

இந்த டெல் லேப்டாப்பின் திரை ஹை டெபினிசன் டபுள்யுஎல்இடி ட்ரூ-லைப் வசதி கொண்டு 15.6 இன்ச் அளவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளேயின் பிக்சல் ரிசலூசன் 1366 x 768 ஆகும். மேலும் க்ராபிக்ஸ் வேலைகளுக்காக இந்த லேப்டாப் இன்டல் எச்டி க்ராபிக்ஸ 3000 வீடியோ கார்டையும் வழங்குகிறது. இதன் ஹார்ட் டிரைவ் 500 ஜிபி அளவை கொண்டுள்ளது.

இதன் ஒலி அமைப்பிற்காக 2 வாட்ஸ் கொண்ட 2 டெல் ஆடியோ ஸ்பீக்கர்களைத் தருகிறது. அதனால் இதில் அருமையாக பாடல்களைக் கேட்கலாம். மின் திறனிற்காக இது 6 செல் கொண்ட 2.2 ஏஎச்ஆர் லையன் பேட்டரியைக் கொண்டிருக்கிறது.

இந்த லேப்டாப் இணைப்பு வசதிகளுக்காக 802.11பி/ஜி/என் வைஃபை இணைப்பு, ப்ளூடூத் மற்றும் விஜிஏ போர்ட் இணைப்பு மற்றும் யுஎஸ்பி 2.0 இணைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.

இதில், வெப்காம் வசதிக்காக 0.3 மெகா பிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. இந்த கேமரா மூலம் வீடியோ சாட்டிங் செய்யலாம். மேலும் இது ஆர்ஜே 45 எர்த்நெட் ஜாக்கையும் கொண்டுள்ளது.

மேலும் மைக்ரோபோன் ஜேக் கனெக்டர் மற்றும் கென்சிங்டன் லாக் ஸ்லாட் ஆகியவற்றையும் இது வழங்குகிறது. இந்த லேப்டாப் 3 இன் 1 மெமரி கார்டு ரீடரையும் வழங்குகிறது. இந்த லேப்டாப் 2.37 எடையை கொண்டுள்ளது. இதன் மொத்த பரப்பு 31.52 x 376.0 x 260.0 மிமீ ஆகும். இந்த லேப்டாப் ட்ரை-லோட் டிவிடி ஆப்டிக்கல் டிரைவயும் வழங்குகிறது.

இவ்வளவு சிறப்புகளையும் கொண்ட இந்த டெல் லேப்டாப் வடிவமைப்பில் அசத்துகிறது. மேலும் இதன் செயல் திறன் மிக அதிவேகமாகவும் இருக்கும். இந்த லேப்டாப் ஒப்சீடியன் கருப்பு மற்றும் ஆப்பிள் சிவப்பு ஆகிய நிறங்களில் வருகிறது. இந்த புதிய டெல் இன்ஸ்பைரான் லேப்டாப் ரூ.32,000 விலையில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X