Home
Computer

ட்ரூ-லைப் தொழில் நுட்பம்த்துடன் புதிய டெல் லேப்டாப்!

By Super

ட்ரூ-லைப் தொழில் நுட்பம்த்துடன் புதிய டெல் லேப்டாப்!
மெல்லிய லேப்டாப்புகளுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது. அதை மனதில் வைத்து டெல் நிறுவனம் இன்ஸ்பைரான் என்4050 என்ற புதிய மெல்லிய லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறது.

இந்த லேப்டாப் அற்புதமான தொழில் நுட்பங்களை வழங்குகிறது. அதாவது இதன் இயங்கு தளம் விண்டோஸ் 7 ஹோம் பேசிக்ஸ் ஆகும். இன்டலின் 2ஜி ப்ராசஸர்களான ஐ3 அல்லது ஐ5 ஆகியவற்றில் ஏதாவது ப்ராசஸரைக் இந்த லேப்டாப் கொண்டிருக்கிருக்கும். க்ராபிக்ஸ் வேலைகளுக்காக இன்டல் எச்டி க்ராபிக்ஸ் 3000/1 ஜிபி எஎம்டி ரேடியோன் எச்டி 6470 எம் மற்றும் இன்டல் எச்எம் 67 சிப்செட்டைக் கொண்டுள்ளது.

இன்ஸ்பைரன் லேப்டாப்பின் திரை 14 இன்ச் ஆகும். இதன் டிஸ்ப்ளே 1366 x 768 பிக்சல் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த டிஸ்ப்ளே உயர் டெபினிசன் கொண்ட டபுள்யுஎல்டி ட்ரூ-லைப் வசதியுடன் வருகிறது. மேலும் இதன் 500 ஜிபி ஹார்ட் டிஸ்க் 5400 ஆர்பிஎம்மில் சுழல்கிறது. அதுபோல் இது 4ஜிபி ரேமைக் கொண்டுள்ளது.

ஒலி அமைப்பிற்காக இன்டலின் உயர் டெபினிசன் கொண்ட ஆடியோவைக் கொண்டிருக்கிறது. இணைப்பு வசதியைப் பார்த்தால் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், ப்ளூடூத், விஜிஎ போர்ட் மற்றும் எர்த்நெட்/ஆர்ஜே45 என அமர்க்களப்படுத்துகிறது.

இன்ஸ்பைரன் லேப்டாப்பில் வீடியோ சாட்டிங்கிற்காக இன்டக்ரேட்டட் 1.3 மெகா பிக்சல் வெப் கேமராவைக் கொண்டுள்ளது. அதுபோல் ஒரு அனலாக் மைக்ரோபோனும் உள்ளது. மேலும் ஆடியோ ஜாக், மெமரி கார்டு ரீடர், கென்சிங்டன் லாக் போன்ற வசதிகளும் இந்த லேப்டாப்பில் உள்ளன.

மின் திறனிற்காக 6 செல் கொண்ட 2.2 எஎச்ஆர் ரேட்டிங் லித்தியம் ஐயன் பேட்டரியும் இந்த லேப்டாப்பில் உள்ளது. மேலும் இந்த லேப்டாப்பின் மொத்த பரப்பு 31.52 மிமீ x 342 மிமீ x 244 மிமீ ஆகும். இதன் எடை 2.2 கிலோவாகும். அதனால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.

மேலும் இன்ஸ்பைரன் லேப்டாப் பலவிதமான நிறங்களில் வருகிறது. இதன் திரை தெளிவான வீடியோவையும் அபாரமான வீடியோ கேம்களையும் வழங்கும். இறுதியாக இந்த டெல் இன்ஸ்பைரன் என்4050 லேப்டாப்பின் விலை ரூ.3,1000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X