ரசிகர்களைக் கவர வரும் டெல் இன்ஸ்பைரன் லேப்டாப்!

Posted By: Karthikeyan
ரசிகர்களைக் கவர வரும் டெல் இன்ஸ்பைரன் லேப்டாப்!

இந்திய லேப்டாப் சந்தையில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வரும் டெல் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய டெல் இன்ஸ்பைரன் 17ஆர் ஸ்பெஷல் எடிசன் லேப்டாப்பை இந்தியாவில் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய லேப்டாப் பல நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.

குறிப்பாக இந்த லேப்டாப், 3ஜி இன்டல் கோர் ஐ5 அல்லது ஐ7 ஆகிய ப்ராசஸர்களைக் கொண்டிருப்பதால் இதன் இயங்கு திறனும் மற்றும் வேகமும் பட்டையைக் கிளப்பும் என்று நம்பலாம். 17.3 இன்ச் அளவில் ஒரு எச்டி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும் இந்த லேப்டாப் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் 64பிட் இயங்கு தளத்தில் இயங்குகிறது.

அதோடு இந்த லேப்டாப்பிற்கு 1.0டிபி சட்டா ஹார்ட் ட்ரைவ், 4ஜிபி அல்லது 8ஜிபி டிடிஆர்3, 2ஜிபி என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி650எம் ஜிபியு மற்றும் எச்டி 1.0எம்பி வெப்காம் ஆகியவை வலு சேர்க்கிறது.

இந்த லேப்டாப்பின் டிஸ்ப்ளே மிகப் பெரியதாகவும் மற்றும் துல்லியமாகவும் இருப்பதால் இதில் மிகச் சிறந்த மல்டி மீடியா அனுபவத்தைப் பெறமுடியும். இந்த லேப்டாப் ஒரு வருட உத்திரவாதத்துடன் வருகிறது. மேலும் இதில் சவுண்ட் சிஸ்டமும் மிக சூப்பராக இருக்கிறது. அதற்காக இந்த லேப்டாப்பில் வேவ்ஸ் மேக்ஸ் ஆடியோ 4.0 தொழில் நுட்பம் மற்றும் துணை ஊபர்களுடன் கூடிய 3 ஸ்பீக்கர்களும் உள்ளன.

இந்த லேப்டாப்பில் எச்டி 1.0எம்பி வெப்காம் உள்ளதால் தங்கு தடையில்லாத வீடியோ உரையாடலை இதில் நடத்த முடியும். மேலும் இந்த லேப்டாப்பில் இணைப்பு வசதிகளுக்காக யுஎஸ்பி, ப்ளூடூத் மற்றும் வைபை போன்ற வசதிகள் உள்ளன.

இந்திய வாடிக்கையாளர்களைக் குறிவைத்து வந்திருக்கும் இந்த லேப்டாப்பின் சாதாரண மாடல் ரூ.65,000க்கும், இதன் நவீன மாடல் ரூ.1,00,000க்கும் விற்கப்பட இருக்கிறது. கண்டிப்பாக இந்திய ரசிகர்களை இந்த லேப்டாப் கவரும் என்பதில் ஐயமில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்