அடேங்கப்பா என சொல்ல வைக்கும் விலையில் 2 லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்த Dell.!
டெல் நிறுவனம் தரமான லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. எனவே தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு லேப்டாப் மாடலுக்கும் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் டெல் நிறுவனம் புதிய இன்ஸ்பிரான் 14 மற்றும் இன்ஸ்பிரான் 14 2-இன்-1 லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
டெல் இன்ஸ்பிரான் 14 அம்சங்கள்: 14-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த டெல் இன்ஸ்பிரான் 14 லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஃபுல் எச்டி தெளிவுத்திறனை ஆதரிக்கும் வெப் கேமராவைக் கொண்டுள்ளது இந்த டெல் லேப்டாப்.

குறிப்பாக 13-வது ஜென் இன்டெல் கோர் மற்றும் AMD Ryzen 7000 பிராசஸர் மூலம் இந்த டெல் இன்ஸ்பிரான் 14 லேப்டாப் இயக்கப்படுகிறது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த டெல் இன்ஸ்பிரான் 14 லேப்டாப் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டெல் நிறுவனம்.
வைஃபை 6இ மற்றும் இன்டெல் தண்டர்போல்ட் 4 ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டெல் இன்ஸ்பிரான் 14 லேப்டாப் மாடல். அதேபோல் இந்த லேப்டாப் டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் தெளிவான ஆடியோவை வழங்கும் என டெல் நிறுவனம் கூறியுள்ளது.
டெல் இன்ஸ்பிரான் 14 விலை: இந்த டெல் இன்ஸ்பிரான் 14 மாடலை 1 மணி நேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் டூயல் மைக்ரோஃபோன்கள் மற்றும் பின்னணி இரைச்சலைக் குறைக்கும் AI ஆகியவற்றைக் கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல். குறிப்பாக இந்த டெல் இன்ஸ்பிரான் 14 மாடலை ரூ.64,990-விலையில் வாங்க முடியும்.

டெல் இன்ஸ்பிரான் 14 2-இன்-1 லேப்டாப்: 14-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் இந்த இன்ஸ்பிரான் 14 2-இன்-1 லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இது டேப்லெட், லேப்டாப், tent மற்றும் ஸ்டாண்ட் ஆகிய நான்கு வெவ்வேறு முறைகளுக்கு இடையில் அவற்றை மாற்ற அனுமதிக்கிறது. அதேபோல் இந்த லேப்டாப் மாடல் 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியை வழங்குகிறது.
இன்டெல் மற்றும் ஏஎம்டி பிராசஸர் வசதிகளை அடிப்படையாக கொண்டு இந்த டெல் இன்ஸ்பிரான் 14 2-இன்-1 லேப்டாப் வெளிவந்துள்ளது. எனவே இந்த லேப்டாப் மாடலை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி எஸ்எஸ்டி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.

என்ன விலை? குறிப்பாக டெல் இன்ஸ்பிரான் 14 லேப்டாப் போன்று பல அசத்தலான அம்சங்களை வழங்குகிறது இந்த டெல் இன்ஸ்பிரான் 14 2-இன்1 லேப்டாப் மாடல். இன்டெல் பிராசஸர் கொண்ட டெல் இன்ஸ்பிரான் 14 2-இன்-1 மாடலின் விலை ரூ.79,990-ஆக உள்ளது. பின்பு ஏஎம்டி பிராசஸர் கொண்ட டெல் இன்ஸ்பிரான் 14 2-இன்-1 மாடலின் ரூ.82,190-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








