Home
Computer

14-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கிய அசத்தலான டெல் இன்ஸ்பிரான் 14 5480 லேப்டாப்.!

அன்மையில் டெல் நிறுவனம் அறிமுகம் செய்த இன்ஸ்பிரான் 14 5480 லேப்டாப் மாடல் அனைத்து இடங்களிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.

அசுஸ், ஹெச்பி நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து டெல் நிறுவனம் புதிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. பின்பு அன்மையில் டெல் நிறுவனம் அறிமுகம் செய்த இன்ஸ்பிரான் 14 5480 லேப்டாப் மாடல் அனைத்து இடங்களிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இன்ஸ்பிரான் 14 5480 லேப்டாப் மாடலின் வன்பொருள் மற்றும் மென்பொருள் அம்சத்திற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

சிறந்த அம்சங்கள்:

சிறந்த அம்சங்கள்:

டெல் இன்ஸ்பிரான் 14 5480 லேப்டாப் சிறந்த அம்சங்கள் என்று பார்க்கையில் குறைவான எடை, அதிக நேர பேட்டரி தாங்கும் பேட்டரி, எம்.2 எஸ்எஸ் ஸ்லாட் போன்ற பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஆனால் இந்த சாதனத்தில் பேஸ் அன்லாக் மற்றும் கைரேகை ஸ்கேனர் போன்றவை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டெல் இன்ஸ்பிரான் 14 5480 சிறப்பம்சங்கள்:

டெல் இன்ஸ்பிரான் 14 5480 சிறப்பம்சங்கள்:

-8-வது ஜென் இன்டெல் கோர் ஐ5-8265யு செயலி

-8ஜிபி ரேம் DDR4 2400MHz

-விண்டோஸ் 10 ஹோம் பிளஸ்

-இன்டெல் யுஎச்டி கிராபிக்ஸ் 620 உடன் கிராபிக்ஸ் மெமரி

-1டிபி 5400ஆர்பிஎம் 2.5 SATA Hard வன்பொருள்

-14.0-இன்ச் எப்எச்டி எல்இடி டிஸ்பிளே (1920 x 1080)

-42வாட் பேட்டரி அமைப்பு- 3-செல் இடம்பெற்றுள்ளது

-வைஃபை ப்ளுடுத்

வடிவமைப்பு:

வடிவமைப்பு:

இந்த டெல் இன்ஸ்பிரான் லேப்டாப் மாடல 14-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டுள்ளதால் கேமிங் மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சாதனம் 1.48 கிலோ எடைக் கொண்டுள்ளது. பின்பு உயர்தர வீடியோக்களை பார்க்க தகுந்த சாதனம் இந்த டெல் இன்ஸ்பிரான் 14 5480.

எல்இடி டிஸ்பிளே:

எல்இடி டிஸ்பிளே:

டெல் இன்ஸ்பிரான் 14 5480 சாதனம் பொதுவாக 14-இன்ச் எல்இடி ஐபிஎஸ் டிஸ்பிளே, பின்பு பேக்லைட் டச் அம்சம் இல்லாத ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஏ1 கிரேடு எல்இடி பேனல் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஆடியோ மற்றும் கேமரா:

ஆடியோ மற்றும் கேமரா:

டெல் இன்ஸ்பிரான் 14 5480 சாதனம் எச்டி கேமரா வசதியைக் கொண்டுள்ளது, பின்பு பெசல்ஸ் அமைப்பு கொண்டு இந்த சாதனம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக பல்வேறு செயலிகளின் வீடியோ கால் அழைப்புகளுக்கு தகுந்தபடி இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாதனத்தில் பேஸ்அன்லாக் வசதி மட்டும் கிடையாது.

இந்த சாதனத்தின் அடியில் பிரங் ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளது, பின்பு மேக்ஸ்ஆடியோ ப்ரோவசதி உள்ளதால் பயன்படுத்துவதற்கு நன்றாக இருக்கும். மேலும் இந்த லேப்டாப்பின் கீபோர்டு வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

டெல் இன்ஸ்பிரான் 14 5480 லேப்டாப் பொறுத்தவரை எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போரட், லேன் போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஹெட்போன் போர்ட், யுஎஸ்பி-ஏ போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

குறிப்பாக 42வாட் பேட்டரி இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் அதிக நேரம் வரை இந்த சாதனத்தை பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
Dell Inspiron 14 5480 Laptop review: Easy on your back, and your wallet: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X