டெல் இன்ஸ்பிரான் 13 7000 2-இன்-1: எல்லா பணிகளுக்கும் ஏதுவானது: விமர்சனம்.!

வழக்கமான 2-இன்-1 சாதனங்களில் உள்ளது போல, பவர் மற்றும் ஒலி கட்டுப்பாட்டு பொத்தான்கள், இதன் பக்கவாட்டில் காண முடிவதில்லை. அதை கீபோர்ட்டில் மட்டுமே பெற முடிகிறது.

|

புதிய டெல் இன்ஸ்பிரான் 13 7000 2-இன்-1 அளவில் தடிமன் குறைந்ததாக அல்லது எடைக் குறைந்ததாக இல்லை என்றாலும், உங்களின் எல்லா பணிகளுக்கு ஏற்றதாகச் செயல்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

டெல் இன்ஸ்பிரான் 13 7000 2-இன்-1: எல்லா பணிகளுக்கும் ஏதுவானது.!

டெல் நிறுவனத்தால் ஈரா க்ரே என்று அழைக்கப்படும் ஒரு அடர்ந்த உலோக அமைப்பை இது பெற்றுள்ளது. இதன் கலவைகள், உருவங்கள் மற்றும் வரிகள் என்று அனைத்தும் புதுமையானது அல்லது சுவாரஸ்யமானது என்று கூற முடியாது என்றாலும், ஒட்டுமொத்தமாக பார்க்க நன்றாக உள்ளது. இதில் உள்ள லிட் மற்றும் டிராக்பேடை சுற்றிலும் அடர்த்தியான விளிம்புகள் இருப்பதை நுட்பமானது என்று குறிப்பிடலாம். ஆனால் அதுவும் எங்காவது மோதினால், சேதமடைய வாய்ப்புள்ளது.

 வடிவமைப்பு

வடிவமைப்பு

இந்த 2-இன்-1 சாதனத்தின் லிட் முழுமையாக பின்நோக்கி மடக்கி டேப்லெட் போல பயன்படுத்தலாம். அப்போது கீபோர்டு வேலை செய்யாது என்பதோடு, அதிக எடைக் கொண்டதாக (1.45 கிலோ) மாறி விடுகிறது. எனவே ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு அல்லது சாய்ந்து கொண்டு மட்டுமே பணியாற்ற முடியும்.

வழக்கமான 2-இன்-1 சாதனங்களில் உள்ளது போல, பவர் மற்றும் ஒலி கட்டுப்பாட்டு பொத்தான்கள், இதன் பக்கவாட்டில் காண முடிவதில்லை. அதை கீபோர்ட்டில் மட்டுமே பெற முடிகிறது. இதனால் டேப்லெட் ஆக மாற்றும் போது, எதிர்பாராதவிதமாக இந்த பொத்தான்கள் தட்டப்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கீழே அளிக்கப்பட்டுள்ளதால், எந்த நிலையிலும் சத்தம் வெளிவருவதில் தடங்கல் ஏற்படுவதில்லை.

வெப்கேமரா

வெப்கேமரா

இது ஒரு குறுகிய திரை முனைகளைக் கொண்டதாக டெல் நிறுவனம் கூறும் நிலையில், மேற்புறத்தில் ஒரு வெப்கேமராவும் முகம் கண்டறிய உதவும் இன்ஃபிராரெட் சென்ஸரும் அமைய போதுமான இடம் உள்ளது. கீழ்புறத்தில் மின்னும் டெல் லோகோ காணப்படுகிறது. இதன் திரை மற்றும் அதை சுற்றிலும் உள்ள பிரேம் ஆகியவை மிகவும் எதிரொலிக்கும் தன்மை கொண்டவை என்பதால், திரையின் ஒளிர்வை கூட்டும் போது, திரையில் பதிந்த ஒவ்வொரு கைரேகைகளும் தெளிவாக தெரிகிறது. இதனால் வீடியோ பார்க்க அல்லது பணியாற்ற மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது.

கீபோர்டு அளவில் சற்று சிறியதாக இருந்தாலும், இடைவெளி அதிகமாக உள்ளது. மற்றப்படி வழக்கத்திற்கு மாறாக, வேறெந்த மாற்றத்தையும் காண முடிவதில்லை. டேப்லெட் முறையில் உட்புறம் வெளியே வந்துவிடும் என்பதால், சற்று கடினமான கீழ்பகுதியில் கைகளை வைத்து தட்டச்சு செய்வதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

விவரக் குறிப்புகள் மற்றும் சாஃப்ட்வேர்

விவரக் குறிப்புகள் மற்றும் சாஃப்ட்வேர்

இந்தச் சாதனத்தின் இரு பதிப்புகள் இந்தியாவிற்கு விற்பனைக்கு வந்துள்ளது. முதலாவது 8வது தலைமுறையின் இன்டல் கோர் ஐ7-8550யூ செயலி, 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உறுதியான டிரைவ் கொண்ட சாதனம் ஆகும். அடுத்தப்படியாக, கோர் ஐ5-8250யூ சிபியூ உடன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி எஸ்எஸ்டி கொண்டு கிடைக்கிறது. இவ்விரண்டும் 13.3-இன்ச் முழு ஹெச்டி தொடு திரை, 38டபிள்யூஹெச்ஆர் பேட்டரி மற்றும் இன்ஃபிராரெட் கேமரா ஆகியவற்றை பொதுவாக பெற்றுள்ளன.

இதன் இடதுபுறத்தில் ஆற்றல் உள்ளீடு துளை, யூஎஸ்பி வகை-சி (3.1 தலைமுறை 1) போர்ட், ஹெச்டிஎம்ஐ 2.0 போர்ட், தரமான யூஎஸ்பி 3.1 தலைமுறை 1 போர்ட் மற்றும் கூட்டு ஆடியோ சாக்கெட் ஆகியவை உள்ளன. வலதுபுறத்தில் ஒரு பாதுகாப்பு ஸ்லாட் மற்றொரு யூஎஸ்பி 3.1 போர்ட் மற்றும் எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. மேலும் இரட்டை-பேண்டு வைஃபை 802.11ஏசி மற்றும் ப்ளூடூத் 4.2 ஆகியவை உள்ளன.

இந்த லேப்டாப்பில் விண்டோஸ் 10 ஹோம் மற்றும் 30 நாள் சோதனைக்கான மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் 365 அளிக்கப்படுகிறது. மேலும் 15 மாதங்களுக்கான மேக்கஃபீ மல்டி சாதன பாதுகாப்பு சந்தாவும் அளிக்கப்படுகிறது.

செயல்திறன்

செயல்திறன்

இந்தச் சாதனத்தின் செயல்பாட்டை பொறுத்த வரை, துவக்கமும் இயக்கமும் சிறப்பாக உள்ளது. மீடியா கோப்புகள், ஸ்ட்ரீம் செய்யப்பட்ட சில வீடியோக்கள், பிரவுஸிங் அடிப்படையிலான பணிகள் ஆகியவற்றை செய்த போதும், எந்தத் தங்கும் தடையும் இல்லாமல் செயல்பட்டது. திரையின் நிறம் சற்று மங்கலாக இருந்தாலும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிறப்பாக காட்சி அளிக்கின்றன. கோணங்களின் பார்வையிலும் எந்தப் பிரச்சனையும் தெரிவதில்லை. ஸ்பீக்கர்களில் இருந்து சத்தம் உள்வாங்கிய நிலையில் வெளி வருவதோடு, அதிக ஒலி அளவில் சற்று சிதறலையும் உணர முடிகிறது. மற்றபடி விண்டோஸ் ஹலோ முகம் கண்டறிவது வேகமாக செயல்படுகிறது.

டேப்லெட்டை பொறுத்த வரை, அவ்வளவு சிறப்பான செயல்பாட்டை பெற முடிவதில்லை. போர்ட்ரெய்ட் முறையில் 16:9 திரையில் சரியாக பொருந்துவது இல்லை என்பது பின்னடைவாக கருதலாம். மிக வேகமாக செயல்படும் போது, பின்பகுதியில் வெப்ப காற்றை வெளியேற்றுவதற்காக ஃபேன் சுற்றும் ஒலியை தெளிவாக கேட்க முடிகிறது.

முடிவு

முடிவு

இந்த இன்ஸ்பிரான் 13 7000 2-இன்-1 அதிக விலைக் கொண்டதாக உள்ளது. நாம் சோதித்து பார்த்த உயர்தர மாடல் ரூ.96,190 என்றும் அதற்கு அடுத்த கோர் ஐ5 வகை ரூ.76,290 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு, எங்கும் எடுத்து செல்ல எதுவாக உள்ள டெல் நிறுவன தயாரிப்பான இன்ஸ்பிரான் 13 மற்றும் எஸ்பிஎஸ் 13 மாடல் லேப்டாப்கள் கிடைக்கின்றன. ஆனாலும் ஒரு வழக்கமான லேப்டாப் என்பதை விட, குறிப்பாக ஒரு 2-இன்-1 வாங்க விரும்பினால், இதை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Dell Inspiron 13 7000 2 in 1 Review ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X