பரபரப்பான விற்பனையில் டெல் அல்ட்ராபுக்!

Posted By: Karthikeyan
பரபரப்பான விற்பனையில் டெல் அல்ட்ராபுக்!

டெல் நிறுவனம் இந்த வருடம் லாஸ் வேகாசில் நடைபெற்ற நுகர்வோர் கண்காட்சியில் தனது முதல் அல்ட்ராபுக் எக்ஸ்பிஎஸ் 13ஐ அறிமுகம் செய்தது. சமீபத்தில் இந்த அல்ட்ராபுக்கை இந்திய சந்தையில் ரூ.79900க்கு களமிறக்கி இருக்கிறது.

இதைப் பற்றி டெல்லின் இந்தியாவிற்கான இயக்குனர் திரு மகேஷ் பல்லா கூறும் போது இந்த எக்ஸ்பிஎஸ் 13 அல்ட்ராபுக் டெல் ஸ்டோர்களிலும் மற்றும் இந்தியாவில் உள்ள மற்ற இதர சில்லறை வர்த்தக கணினி ஸ்டோர்களிலும் கிடைக்கும் என்று கூறுகிறார். மேலும் வரியைச் சேர்க்காமல் ரூ.79000லிருந்து இந்த அல்ட்ராபுக்குகள் கிடைக்கும் என்கிறார். குறிப்பாக அலுவலகப் பணியாளர்களுக்காகவே இந்த அல்ட்ராபுக் பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

இந்த டெல் அல்ட்ராபுக் பல சிறந்த தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. அதாவது இந்த அல்ட்ராபுக் 2ஜி இன்டல் கோர் ஐ5 அல்லது ஐ7 ப்ராசஸர்களில் இயங்குகிறது. மேலும் இது இன்டல் எச்டி 3000 க்ராபிக்ஸ் மற்றும் மிகவும் வெளிச்சமான டபுள்யுஎல்இடி 300-நிட் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. அதுபோல் 128 ஜிபி அல்லது 256 ஜிபி கொண்ட சாலிட் ஸ்டேட் ஹார்ட் ட்ரைவைக் கொண்டிருக்கிறது.

மேலும் இப்போது இந்தியாவில் பல நிறுவனங்கள் தங்களது அல்ட்ராபுக்குகளை களமிறக்கி இருக்கின்றன. அதனால் டெல்லின் இந்த புதிய அல்ட்ராபுக்கிற்கு கடும் போட்டி இருக்கும் என்பது உறுதி.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot