Home
Computer

ஐஎப்எ விழாவில் டெல் அறிமுகம் செய்த புதிய அல்ட்ராபுக்

By Karthikeyan
ஐஎப்எ விழாவில் டெல் அறிமுகம் செய்த புதிய அல்ட்ராபுக்

ஜெர்மனியின் பெர்லின் நகரமே கணினி சாதனங்களால் அலங்கரிக்கப்படும் அளவிற்கு அங்கு நடைபெறும் ஐஎப்எ விழாவில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளைப் போட்டி போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வைக்கின்றனர்.

அந்த வகையில் டெல் நிறுவனமும் தனது புதிய அல்ட்ராபுக்கை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய அல்ட்ராபுக்கிறக்கு எக்ஸ்பிஎஸ் டுவோ 12 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த அல்ட்ராபுக் கன்வெர்ட்டிபுள் தன்மை கொண்டது.

இந்த லேப்டாப்பின் திரை கோர்னிங் கொரில்லா கண்ணாடியால் ஆனது. மேலும் இந்த லேப்டாப் இன்டல் ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர் அல்லது ஐ7 சிப்பைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

இந்த லேப்டாப் அலுமினியம் மற்றும் கார்பன் பைபர் தகடுகளால் செய்யப்பட்டுள்ளதால் இந்த லேப்டாப் உறுதியாக இருக்கும். மேலும் டெல் லேப்டாப் அருமையான கீபோர்டு, டச்பேட் மற்றும் பேக்லிட் கீகளை கொண்டுள்ளது.

விண்டோஸ் 8 இயங்குதளம் களம் இறக்கப்படும் நாளான அக்டோபர் 26ல் இந்த டெல் அல்ட்ராபுக்கும் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X