இம்ப்ரஸ் பண்ண வரிசையில் வரும் டெல் லேப்டாப்கள்!

கூடிய விரைவில் டெல் நிறுவனம் தனது முதல் இன்ஸ்பிரான் 14-இசட் அல்ட்ராபுக்கை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த அல்ட்ராபுக் 14 இஞ்ச் திரை வசதி கொண்டது. தகவல்களை வசதியாகவும், தெளிவாகவும் பார்க்கலாம்.
இந்த இன்ஸ்பிரான் 14-இசட் அல்ட்ராபுக் 1.87 கிலோ கிராம் எடை கொண்டது. கையாள்வதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். இந்த இன்ஸ்பிரான் 14-இசட் லேப்டாப் 7 மணி நேரம் 30 நிமிடம் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது. இந்த அல்ட்ராபுக் கூடிய விரைவில் இந்திய மார்கெட்டில் அறிமுகமாகும்.
இன்ஸ்பிரான் 14-ஆர் மற்றும் 15-ஆர் என்ற இரண்டு லேப்டாப்களும், இன்டெலின் 3-வது ஜெனரேஷனான கோர் ஐ-5-321-எம் பிராசஸர் வசதியினை கொண்டது. வின்டோஸ்-7 ஹோம் பேசிக் இயங்குதளத்தில் இயங்கும். ஆனால் இந்த 2 லேப்டாப்களும் திரையை பொருத்த வரையில் சில வேறுபாடுகளை கொண்டிருக்கிறது.
அந்த வகையில் டெல் 14-ஆர் லேப்டாப் 14 இஞ்ச் திரையினையும், 15-ஆர் லேப்டாப் 15.6 இஞ்ச் திரையினையும் வழங்கும். இந்த இரண்டு லேப்டாப்களும் ரூ.39,000 விலை கொண்டதாக இருக்கும்
இன்ஸ்பிரான் 15-ஆர் லேப்டாப் ஸ்பெஷல் எடிஷன் ரூ. 49,000 விலையினையும், 17-ஆர் ஸ்பெஷல் எடிஷன் ரூ. 63,682 விலையினையும் கொண்டது. இந்த இன்ஸ்பிரான் ஆர் வரிசை லேப்டாப்கள் பற்றி அதிகமான தொழில் நுட்ப விவரங்களை கூடிய விரைவில் பெறலாம்.


Click it and Unblock the Notifications