3 புதிய அவதாரங்களில் டெல்!

Posted By: Staff
3 புதிய அவதாரங்களில் டெல்!
டெல் நிறுவனம் வோஸ்ட்ரோ 3000 வரிசை லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த டெல் லேப்டாப்கள் இன்டெல் நிறுவனத்தின் 3-வது ஜெனரேஷன் பிராசஸரை கொண்டது.

நிறங்களிலும் அப்பர்டீன் சில்வர், பிரிஸ்பேன் ப்ரோன்ஸ் மற்றும் லூசெர்ன் ரெட் என்று மூன்று கலக்கலாம் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டள்ளது.

விண்டோஸ்-7 ஹோம் ப்ரீமியம் இயங்குதளத்தில் இயங்கும் இந்த லேப்டாப்கள் சிறந்த தொழில் நுட்பத்தினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் சிறப்பாக சப்போர்ட் செய்யும் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த லேப்டாப்களின் விலை விவரத்தினையும் பார்க்கலாம். வோஸ்ட்ரோ 3560 லேப்டாப் ரூ. 42,990 விலையினையும், வோஸ்ட்ரோ 3360 லேப்டாப் ரூ. 44,990 விலையையும், வோஸ்ட்ரோ 3460 லேப்டாப் ரூ.41,990 விலையினையும் கொண்டதாக இருக்கும்.

இதில் முதலில் கூறிய வோஸ்ட்ரோ 3560 லேப்டாப்பினை டெல் வலைத்தளத்தில் பெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த 3 லேப்டாப்களும் ஜூன் 21-ஆம் தேதி வெளியாகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்