டெல் ஏலியன்வேர் எம்15 &எம்17 கேமிங் லேப்டாப்கள் அறிமுகம் : விரிவான அலசல்!
டோப்பி ஐ டிராக்கிங் தொழில்நுட்பத்துடன் வரும் உலகின் முதல் 15 அங்குல மடிக்கணினி ஏலியன்வேர் எம்17 என டெல் நிறுவனம் பெருமையுடன் குறிப்பிடுகிறது.
கணிணி மற்றும் லேப்டாப் தயாரிப்பாளர்கள் தங்களது கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் மிகப்பெரிய நிகழ்வில் ஒன்றான கம்ப்யூட்டெக்ஸ் 2019, தற்போது நடைபெற்றுவரும் நிலையில் ஜூன் 1 நிறைவுபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஏராளமான புதிய படைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், டெல் நிறுவனத்தின் மறுவடிவமைக்கப்பட்ட ஏலியன்வேர் லேப்டாப்களான எம்15 மற்றும் எம்17 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விரு மடிக்கணினிகளும் புதிய வடிவமைப்பு மற்றும் சக்திவாய்ந்த வன்பொருள் கட்டமைப்புகளையும் கொண்டுள்ளன. மேலும் இந்த இரண்டு மடிக்கணினிகளும் அந்நிறுவனத்தின் தயாரிப்புகளிலேயே மிகவும் மெல்லிய கேமிங் மடிக்கணினிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் லேப்டாப்
டோப்பி ஐ டிராக்கிங் தொழில்நுட்பத்துடன் வரும் உலகின் முதல் 15 அங்குல மடிக்கணினி ஏலியன்வேர் எம்17 என டெல் நிறுவனம் பெருமையுடன் குறிப்பிடுகிறது. நீல ஒளி வெளிப்பாட்டை குறைப்பதற்கு பொறுப்பான ஐ-சேப் சர்டிபிகேட் கொண்ட டிஸ்ப்ளே(Eyesafe-certified display) உடன் வெளியான உலகின் முதல் லேப்டாப் இதுவாகும் . இந்த நிகழ்வில் டெல் நிறுவனம் இரண்டு புதிய கேமிங் ஹெட்செட்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏலியன்வேர் எம் 15
1920x1080 பிக்சல்கள் காட்சித்திறன் கொண்ட 15.6 அங்குல முழு எச்.டி திரையை கொண்ட ஏலியன்வேர் எம்15 மடிக்கணிணியை டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் திரையானது 7ms ரெஸ்பான்ஸ் டைம் மற்றும் 240hz வரையிலான புதுப்பிப்பு விகிதத்தை கொண்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி, இது டோப்பி ஐ டிராக்கிங் தொழில்நுட்பத்துடன் வரும் உலகின் முதல் 15 அங்குல மடிக்கணினி ஆகும்.மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப குறைந்த விகிதம் முதல் அதிக புதுப்பிப்து விகிதம் கொண்ட திரையை தேர்வு செய்யலாம். அதிகபட்சமாக 60hz புதுப்பிப்பு விகிதம் கொண்ட 4k அல்ட்ரா எச்.டி திரை கிடைக்கிறது.

9 வது தலைமுறை இன்டெல் கோர்
இந்த மடிக்கணினி 9 வது தலைமுறை இன்டெல் கோர் I9-9980KK ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இதில் 16GB ரேம் மற்றும் 4டிபி PCIe M.2 SSDயும் உள்ளது. கிராபிக்ஸ் திறனை பொருத்தமட்டில், NVIDIA Geforce GTX 1650 ஜிபியு முதல் 8ஜிபி ஜிடிடிஆர்6 வி-ரேம் கொண்ட NDIDIA Geforce RTX 2080 ஜிபியு வரை விருப்பத்திற்கு ஏற்ப தேர்வுசெய்யலாம்.

லூனார் லைட் மற்றும் டார்க் சைட் ஆப் லூனார்
டெல் ஏலியன்வேர் எம் 15 மடிக்கணிணி லூனார் லைட் மற்றும் டார்க் சைட் ஆப் லூனார் என இரு நிறங்களில் வருகிறது. $ 1,499.99 (ரூ 1,04,400) என்ற தொடக்க விலையில் கிடைக்கும் இந்த கேமிங் மடிக்கணினி 11 ஜூன் 2019 முதல் விற்பனைக்கு வருகிறது.

ஏலியன்வேர் எம் 17
1920x1080 பிக்சல்கள் காட்சித்திறன் கொண்ட 17.3 அங்குல முழு எச்.டி திரையை கொண்டுள்ளது இந்த ஏலியன்வேர் எம்17 மடிக்கணிணி. இதன் திரையானது 9ms ரெஸ்பான்ஸ் டைம் மற்றும் 144hz வரையிலான புதுப்பிப்பு விகிதத்தை கொண்டுள்ளது. இந்த மடிக்கணினி 9 வது தலைமுறை இன்டெல் கோர் I9-9980KK ஆக்டா-கோர் செயலியை கொண்டுள்ளது. மேலும் இதில் 16GB டிடிஆர்4 ரேம் மற்றும் 4டிபி PCIe M2.0 SSDயும் உள்ளது.

11 ஜூன் 2019 முதல்
கிராபிக்ஸ் திறனை பொருத்தமட்டில், 8ஜிபி NVIDIA Geforce GTX 2080 ஜிபியு வரை விருப்பத்திற்கு ஏற்ப தேர்வுசெய்யலாம். டெல் ஏலியன்வேர் எம் 17 மடிக்கணிணி லூனார் லைட் மற்றும் டார்க் சைட் ஆப் லூனார் என இரு நிறங்களில் வருகிறது. $ 1,499.99 (ரூ 1,04,400) என்ற தொடக்க விலையில் கிடைக்கும் இந்த கேமிங் மடிக்கணினி 11 ஜூன் 2019 முதல் விற்பனைக்கு வருகிறது.

ஹெட்செட்
கேமிங் மடிக்கணினிகளை தவிர, அந்நிறுவனம் ஏலியன்வேர் 7.1 கேமிங் ஹெட்செட் மற்றும் ஏலியன்வேர் ஸ்டீரியோ கேமிங் ஹெட்செட் என்று இரண்டு புதிய கேமிங் ஹெட்செட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications