Home
Computer

டெல் ஏலியன்வேர் எம்11எக்ஸ் - வேற்று கிரக லேப்டாப்

By Super
டெல் ஏலியன்வேர் எம்11எக்ஸ் - வேற்று கிரக லேப்டாப்
டெல் ஏலியன்வேர் எம்-11 எக்ஸ் லேப்டாப்பைப் பார்த்தால் அது ஒரு வேற்று கிரகத்திலிருந்து தவறி இந்த பூமிக்குள் விழுந்து விட்டதோ என்று தோன்றும். அந்த அளவிற்கு அதன் அமைப்பும், ஸ்டைலும், தொழில் நுட்பத்தையும் கொண்டிருக்கிறது.

டெல் ஏலியன்வேர் எம்-11எக்ஸ் லேப்டாப்பைப் பார்த்தால் அது மூடி வைத்த ப்ரீப்கேஸ் போல் இருக்கிறது. இது இரண்டு பிரிவாக இருக்கிறது. ஒரு பிரிவில் லேப்டாப்பும் மறு பிரிவில் வயர்கள், அடாப்டர்கள் மற்றும் இன்ஸ்டாலேஷன் சிடிக்கள் உள்ளன. இந்த டிவைஸ் இன்பில்ட் சிடி ட்ரைவ் கொண்டு இல்லாததால் அதற்காக நாம் தனியாக எக்ஸ்டர்னல் ட்ரைவ் வாங்க வேண்டும்.

இதை ஒரு வீடியோ கேம் எந்திரம் என்று அழைக்கலாம். இதன் எடை 2 கிலோவாகும். இதன் பருமன் அதிகமாக இருந்தாலும் இது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது.

டெல் ஏலியன்வேர் எம்11எக்ஸ்ன் 11.6 இன்ச் டிஸ்ப்ளே 1366 X 768 பிக்ஸல் ரிசலூசனைத் தருவதால் எச்டி வீடியோவை இதில் அருமையாக பார்க்கலாம். மேலும் இது 720பி அளவு எச்டி வீடியோவை சப்போர்ட் செய்கிறது. அடுத்த இதன் சிறப்பு என்னவென்றால் இதன் கிலிப்ஷ் ஒலிப் பெருக்கிகளாகும்.

இந்த ஒலிப் பெருக்கிகள் இரைச்சல் இல்லாத தரமான கிர்ஸ்டல் ஒலி அமைப்பைத் தருகின்றன. மேலும் இந்த லேப்டாப்பில் ஹெட்போன் வசதியும் உள்ளது. அதனால் தனியாகவும் நாம் இதில் இசையைக் கேட்டு அனுபவிக்கலாம்.

டெல் ஏலியன்வேர் எம்11எக்ஸ்ல் வீடியோ கேம்களை தாராளமாக விளையாடலாம். ஆனால் அதன் க்ராம்டு கீபோர்ட் சற்று குறைபாடாக இருக்கிறது. அதாவது இதில் சிடி ட்ரைவ் இல்லாததால் விளையாடுபவர் அந்த விளையாட்டு டிஸ்க்கின் நகலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அல்லது அவர் அந்த விளையாட்டின் டிஜிட்டல் நகலை பயன்படுத்த வேண்டும். எனவே சிடியை இயக்கித்தான் வீடியோ கேம் விளையாட முடியும்.

அதைத் தவிர்த்து பார்த்தோம் என்றால் டெல் ஏலியன்வேர் எம்11எக்ஸ்ன் அதன் கீபோர்டின் வண்ணம் தொடங்கி அதன் வைபை வரை எல்லாமே புதுமையாக இருக்கின்றன. இது விண்டோஸ் 7 மற்றும் 64 பிட் மற்றும் இண்டல் கோர் ஐ7 1.50 ஜிஹர்ட்ஸ் ப்ராசஸர் மற்றும் 8ஜிபி ராம் பெற்றுள்ளது.

மேலும் 750 ஜிபி எச்டிடி இண்டல் இண்டக்ரேட்டட் க்ராபிக்ஸ் உடன் டூவல் க்ராபிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது. இதன் விலை என்று பார்த்தால் ரூ.64,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X