Home
Computer

வைரஸ் உள்ள பைல்களை அழிக்க...!

By Keerthi

நாம் சில வேளைகளில் வேண்டாத பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும்.

Cannot delete file: Access is denied
There has been a sharing violation.
The source or destination file may be in use.
The file is in use by another program or user.
Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.

பைலை அணுக இயலவில்லை. இந்த பைலுக்கு உங்களுக்கு வழி இல்லை. பைல் பயன்பாட்டில் உள்ளது. இன்னொருவர் இதே பைலை பயன்படுத்திக் கொண்டுள்ளார். இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டுள்ளது. பைல் அழிக்கப்படாமல் இருக்க, டிஸ்க் பாதுகாக்கப்பட்டுள்ளது -- என்று பலவகையில் செய்திகள் கிடைக்கலாம். அழிக்க மறுக்கையில் மட்டுமின்றி, பைலுக்கு வேறு பெயர் இட முயற்சிக்கையில், ஓரிடத்திலிருந்து நகர்த்த முயற்சிக்கையிலும் இது போன்ற செய்திகள் கிடைக்கும்.

இவற்றை எல்லாம் மீறி நாம் பைலை அழிக்க எண்ணினாலும், இந்த செய்தி எதனால் வருகிறது
என்று கண்டறிவதில் நேரம் செலவழியும். இதற்குத் தீர்வாக நமக்குக் கிடைத்திருப்பது அன்லாக்கர் (Unlocker) என்னும் புரோகிராம். இதனை http://ccollomb. free.fr/unlocker/#download என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.

வைரஸ் உள்ள பைல்களை அழிக்க...!

இந்த பைலை இலவசமாக இணைய தளத்திலிருந்து இறக்கி, இன்ஸ்டால் செய்துவிட்டால், விண்டோஸ் இது போன்ற செய்தி தருகையில், அன்லாக்கர் புரோகிராமை, அந்த பைலின் பெயர் அல்லது போல்டரின் பெயரில் ரைட் கிளிக் செய்து இயக்கத்திற்குக் கொண்டு வரலாம்.

அப்போது பைலை அல்லது போல்டரை அழிக்க விடாமல் தடுக்கும் லாக்கர்கள் பட்டியலிடப்படும். மெனுவில்Unlock என்பதில் கிளிக் செய்தால், அனைத்து லாக்கர்களும் விலக்கிக் கொள்ளப்பட்டு, பைல் அழிக்கப்படும். அல்லது நீங்கள் விரும்பும் வேலையை மேற்கொள்ள வழி கிடைக்கும்.

அன்லாக்கர் போல இணையத்தில், அடம் பிடிக்கும் பைல்களை அழிக்கப் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. ஆனால் மற்றவற்றில் கிடைக்காத பல வசதிகளை அன்லாக்கர் கொண்டுள்ளது.

அவற்றைப் பயன்படுத்திப் பார்க்கையில் இதனை உணரலாம். அன்லாக்கர் தரும் அனைத்து வசதிகளையும் தரும் புரோகிராம்கள் எதுவும் இந்த புரோகிராம்களில் இல்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X