வரிசை கட்டும் விலை குறைந்த உபிசிலேட் டேப்லெட்டுகள்

டேட்டாவிண்ட் நிறுவனம் தனது உபிசிலேட் டேப்லெட் வரிசையில் மேலும் சில புதிய குறைந்த விலை டேப்லெட்டுகளைக் களமிறக்கி இருக்கிறது. இந்த டேப்லெட்டுகளுக்கு உபிசிலேட் 7ஆர்ஐ, உபிசிலேட் 7ஆர்+, உபிசிலேட் 7சிஐ மற்றும் உபிசிலேட் 7சி+ என்று பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.
இந்த டேப்லெட்டுகள் ரூ.2,999லிருந்து ரூ.4,499 வரை விற்கப்படுகின்றன. இந்த டேப்லெட்டுகள் குறைந்த விலை இண்டர்நெட் இணைப்பைக் கொண்டிருக்கின்றன. மேலும் இவை சிறந்த ஹார்வேர் வசதிகளையும் இந்த டேப்லெட்டுகள் கொண்டுள்ளன.
இந்த டேப்லெட்டுகள் 7 இன்ச் அளவில் ஒரு திரையைக் கொண்டிருக்கின்றன. மேலும் இவை ஆன்ட்ராய்டு 4.0.3 இயங்கு தளத்தில் இயங்குகின்றன. அதோடு இந்த டேப்லெட்டுகள் கோர்டெக்ஸ் எ8, 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் மற்றும் 512எம்பி ரேம் போன்ற தொழில் நுட்பங்களைக் கொண்டிருப்பதால் இவை மிக வேகமாக இயங்கும் என்று நம்பலாம். அதோடு இந்த டேப்லெட்டில் மல்டிமீடியா கன்டென்டுகள் மிக சூப்பராக இருக்கும்.
அதோடு இந்த டேப்லெட்டுகளில் எச்டி வீடியோ, சூப்பரான ஸ்பீக்கர் சிஸ்டம், தொடுதிரை, அதிவேக ப்ராசஸர், யுஎஸ்பி போர்ட், அட்டகாசமான கேமரா மற்றும் ஜி-சென்சார் போன்ற அனைத்து வசதிகளும் இந்த டேப்லெட்டுகளில் உள்ளன.


Click it and Unblock the Notifications