Home
Computer

விற்பனையில் இமாலய சாதனை படைக்குமா யூபி ஸ்லேட்?

By Karthikeyan
விற்பனையில் இமாலய சாதனை படைக்குமா யூபி ஸ்லேட்?

டேட்டா வின்ட் தனது யூபி ஸ்லேட் மற்றும் ஆகாஸ் 7 டேப்லெட்டுகளின் பெயர்களை மாற்றி இருக்கிறது. அதாவது ஆகாஸ் டேப்லெட் யூபிஸ்லேட் எனவும் யூபிஸ்லேட்-7 மற்றும் யூபிஸ்லேட் 7+ எனவும் பெயர் மாற்றம் பெற்றிருக்கின்றன. இந்த தகவல் டேட்டாவின்டின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வந்திருக்கிறது. இந்த 2 டேப்லெட்டுகளுமே மாணவர்களுக்காகவே தயாரிக்கப்பட்டவை ஆகும்.

இந்த யூபிஸ்லேட்7+ டேப்லெட்டை வாங்குவதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் தொடங்கியது. விண்ணப்பித்தவர்களுக்கு இந்த மாதத்திற்க்குள்ளாகவே இந்த டேப்லெட் கிடைத்துவிடும். மேலும் மார்ச் வரை விண்ணப்பிக்கலாம். இந்த யூபிஸ்லேட்7+ டேப்லெட் ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த டேப்லெட் கோர்டக்ஸ் எ8, 700 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசஸரையும் அதோடு எச்டி வீடியோ கோ ப்ராசஸரையும் கொண்டுள்ளது.

இந்த யூபி ஸ்லேட்7+ டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 7.5 x 4.7 x 0.6 இன்ச் அளவுள்ள தொடு திரையைக் கொண்டுள்ளது. இதன் வெப்காம் 0.3 மெகா பிக்சல் எச்டி வசதியுடன் பில்ட்இன் மைக்கையும் கொண்டுள்ளது.

சேமிப்பு வசதியைப் பார்த்தால் இந்த டேப்லெட் ப்ளாஷ் ஈ-ப்ரோம் கொண்டுள்ளது. இது 2 ஜிபி ரேமை கொண்டிருக்கிறது. மேலும் இதன் சேமிப்பு வசதியை விரிவுபடுத்த மைக்ரோஎஸ்டி மற்றும் ட்ரான்ஸ்ப்ளாஷ் கார்டுகளையும் இந்த டேப்லெட் கொண்டிருக்கிறது. அதோடு வைபை மற்றும் எச்டிஎம்ஐ போர்ட்டும் உண்டு. ஆனால் ப்ளூடூத் வசதி இந்த லேப்டாப்பில் கிடையாது. மேலும் யுஎஸ்பி 2.0வைக் கொண்டுள்ளது.

பொதுவான அம்சங்களாகப் பார்த்தால் இந்த டேப்லெட் மின்திறனிற்காக 3200 மெகா ஹெர்ட்ஸ் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி 5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும். மேலும் இந்த டேப்லெட்டின் மொத்த பரப்பு 190.5 x 118.5 x 15.7 மிமீ ஆகும். அதோடு இதன் மொத்த எடை 350 கிராம் மட்டுமே. இந்த யூபிஸ்லேட் டேப்லெட் லினக்ஸ் இயங்கு தளத்தில் இயங்குகிறது.

இந்த யூபிஸ்லேட் 7+ டேப்லெட்டைப் போல குறைந்த விலையில் எந்த ஒரு டேப்லெட்டும் இதுவரை வரவில்லை. அதனால் இதன் விற்பனை மிக அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதை உலகின் மிகக் குறைந்த விலை டேப்லெட் என்றும் அழைக்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X