உங்க கம்ப்யூட்டருக்கு ரேம் வாங்குறீங்களா, இதை கொஞ்சம் பாருங்க..

|

ரேம் அதாவது ரேண்டம் அக்செஸ் மெமரி உங்க கம்ப்யூட்டர் சீராக எவ்வித தொல்லையும் இல்லாம இயங்க மிகவும் அவசியமான சாதனம். கம்ப்யூட்டர் உத்தரவுகளை சேமித்து அவற்றை சீரான வேகத்தில் இயக்கும் பணியை ரேம் செய்கிறது.

உங்க கம்ப்யூட்டருக்கு ரேம் வாங்குறீங்களா, இதை கொஞ்சம் பாருங்க..

அந்த வகையில் உங்க கம்ப்யூட்டருக்கு சிறப்பான ரேம் ஒன்றை தேர்வு செய்வது ஈசியான விஷயம் தான். பொதுவாக ரேம் வாங்கும் போது சில முக்கிய அம்சங்களை கவனத்தில் வைக்க வேண்டும். உங்க கம்ப்யூட்டருக்கு சிறப்பான ரேம் வாங்க நீங்க கவனிக்க வேண்டிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்..

இண்டர்ஃபேஸ்

இண்டர்ஃபேஸ்

சரியான ரேம் ஸ்டிக் தேர்வு செய்ய உங்களுக்கு அவசியமான ஒன்று தான் அதன் இண்டர்ஃபேஸ். இதை செய்ய உங்களின் மதர் போர்டில் வழங்கப்பட்ட டிடிஆர் (DDR) ஸ்லாட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

இதை மதர்போர்டு வாங்கும் போதே கவனிக்க வேண்டும். அதாவது உங்க மதர்போர்டுல டிடிஆர் 3 ஸ்லாட் இருந்தால் அதில் டிடிஆர் 2 ரேம் ஸ்டிக் பயன்படுத்த முடியாது.

ஃபிரீக்வன்சி

ஃபிரீக்வன்சி

ரேமில் கவனிக்கப்பட வேண்டிய இன்னுமொரு முக்கிய அம்சம் அதன் ஃபிரீக்வன்சி தான். குறைந்த ஃபிரீக்வன்சி கொண்ட மதர்போர்டில் குறைந்த ஃபிரீக்வன்சி உள்ள ரேம் ஸ்டிக் பொருத்தினால் இரண்டு சாதனங்களும் பாழாகி விடும். மாறாக மதர்போர்டை விட ரேம் ஸ்டிக் ஃபிரீக்வன்சி அதிகமாக இருந்தால் கம்ப்யூட்டர் வேகம் சீராக இருக்கும்.

ரேம் திறன்

ரேம் திறன்

உங்க கம்ப்யூட்டருக்கு தேவையான ரேம் மெமரி அளவு 4ஜிபி முதல் 32ஜிபி வரை கிடைக்கிறது. அதிகப்படியான மல்டி டாஸ்கிங் செய்வீர்கள் என்றால் அதிகப்படியான ரேம் பொருத்தலாம். பொதுவாக ரேம் மெமரியை கூடுதலாக நீட்டித்தால் கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்கும். கம்ப்யூட்டர் ரேம் மற்றும் லேப்டாப் ரேம் முற்றிலும் வித்தியாசமானது.

டைமிங்

டைமிங்

ரேம் வாங்கும் போது அதன் லேட்டென்சி செட்டிங் கவனிக்கப்பட வேண்டும். அதாவது மெமரி கண்ட்ரோலர் கம்ப்யூட்டர் தகவலை சிப்களுக்கு அனுப்ப எடுத்துக் கொள்ளும் நேரம். இவ்வாறு சிப்செட்டிற்கு தகவல் அனுப்பப்படும் நேரம் மிகவும் குறைவாக இருக்க வேண்டும். இதை மதர்போர்டின் பிஐஓஎஸ் (BIOS) மூலம் மாற்றியமைக்கவும் முடியும். இந்திய சந்தைகளில் குறைந்க லேட்டென்சி உள்ள ரேம் ஸ்டிக் விலை அதிகம்.

சிங்கிள் சேனல் மற்றும் மல்டிசேனல்

சிங்கிள் சேனல் மற்றும் மல்டிசேனல்

சேனல்களின் எண்ணிக்கை மதர்போர்டு அம்சம் ஆகும். ஒவ்வொரு மதர்போர்டிலும் சிங்கிள் சேனல், டூயல் சேனல் மற்றும் பல்வேறு சேனல்கள் இருக்கும். இந்த சேனல்களின் எண்ணிக்கை மெமரி அதன் மெமரி கண்ட்ரோலருடன் தொடர்பு கொள்ள எடுத்துக் கொள்ளும் பாதைகளை நிர்ணயிக்கும். இதனை மதர்போர்டு வாங்கும் போதே கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.

Best Mobiles in India

Read more about:
English summary
You need to consider these factors while you choose a RAM for your PC.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X