பி.டி.எப். பைல் பற்றி சில தகவல்கள்!!!

By Keerthi
|

நாம் இணையத்தில் ஏதேனும் ஒரு தளத்திலிருந்து, பி.டி.எப். பைல் ஒன்றை தரவிறக்கம் செய்திடுகையில், குரோம் பிரவுசர், இந்த பைல் உங்கள் கம்ப்யூட்டரைக் கெடுக்கும். இதனைத் தக்க வைக்கவா? அல்லது இறக்குவதை நிராகரிக்கட்டுமா? என்று கேட்கிறது.

மற்ற பிரவுசர்கள் இந்த கேள்வியைக் கேட்பதில்லை. குரோம் மட்டும் ஏன் கேட்கிறது? உண்மையிலேயே பி.டி.எப். பைல்கள், கம்ப்யூட்டரைக் கெடுக்குமா? இதோ அதற்கான பதில்கள்.

முதலில் பி.டி.எப். பைல் என்பது, டெக்ஸ்ட் மற்றும் இமேஜ் கொண்ட ஒரு பைல் மட்டுமே. இது எப்படி கம்ப்யூட்டரைக் கெடுக்கும் அளவிற்கு அபாயத் தன்மை கொண்டதாக இருக்க முடியும்? என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

ஆனால், இந்தக் கேள்வி பொருளற்றது என, இதனைச் சற்று ஆய்வு செய்திடுகையில் தெரிகிறது. அதனை இங்கு காணலாம். கடந்த சில ஆண்டுகளாகவே, பி.டி.எப். பைல்களைப் படிக்க நாம் பயன்படுத்தும் அடோப் ரீடர் போன்ற புரோகிராம்கள், இணையத்தில் வைரஸ்கள் எளிதாகத் தாக்குவதற்கான நிலையில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

பி.டி.எப். பைல் பற்றி சில தகவல்கள்!!!

மேலும், பி.டி.எப். பைல்கள் வெறும் டெக்ஸ்ட் மற்றும் இமேஜ் மட்டும் கொண்டதல்ல. ஸ்கிரிப்ட், பதிக்கப்பட்ட இமேஜ் மற்றும் சில கேள்விக்குரியவைகளும் இதில் அடங்கியுள்ளன. பி.டி.எப். பைல் வடிவத்தில் பல குழப்பமான படிமங்களில் விஷயங்கள் அடுக்கப்பட்டு கிடைக்கின்றன.

இப்படி அடைக்கப்படும் பல விஷயங்கள், வைரஸ்களை அனுப்பும் ஹேக்கர்களுக்கு, விஷமத்தனமான செயல்பாடுகளை மேற்கொள்ள இடம் அளிக்கின்றன. இவற்றில் எவை ஹேக்கர்களுக்குச் சாதகமான சூழ்நிலையை அமைக்கின்றன என்று பார்க்கலாம்.

பி.டி.எப். பைல்களில் ஜாவா ஸ்கிரிப்ட் இடம் பெறலாம். இந்த மொழியைத்தான் வெப் பிரவுசர்களில் பயன்படுத்துகின்றனர். எனவே, அடோப் ரீடர் வழியாக, ஹேக்கர்கள் இதனைப் பயன்படுத்தி தங்கள் விஷமத்தன வேலைகளை மேற்கொள்கின்றனர்.

மேலும், அடோப் ரீடர், அடோப் தொகுப்பிற்கான ஸ்பெஷல் ஜாவா ஸ்கிரிப்டைப் பயன்படுத்துகிறது. இது பாதுகாப்பாற்றது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். பி.டி.எப். பைல் செய்யும் வேலைகள் பதிக்கப்பட்ட ப்ளாஷ் பி.டி.எப். பைல்களில், பதிக்கப்பட்ட ப்ளாஷ் விஷயங்கள் இடம் பெறலாம்.

2012 ஏப்ரல் வரை, அடோப் அதனுடைய ப்ளாஷ் பிளேயரையே பயன்படுத்தி வந்தது. பொதுவாக ப்ளாஷ் பிளேயரில் காணப்படும் பிழைகள் அப்படியே இங்கும் இருப்பதால், ஹேக்கர்கள் இதனையும் பயன்படுத்துகின்றனர்.

தற்போது, பி.டி.எப். ரீடர்கள், பைலில் உள்ள ப்ளாஷ் பிளேயரைப் பயன்படுத்தாமல், கம்ப்யூட்டர்களில் உள்ள ப்ளாஷ் பிளேயரையே பயன்படுத்தி வருகின்றன.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X