COMPUTEX 2025.. இரண்டு லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்த Acer.. விலையை சொன்னா நம்புவீங்களா?
ஏசர் நிறுவனம் COMPUTEX 2025 நிகழ்வில் ஏசர் ஸ்விஃப்ட் எக்ஸ் 14 ஏஐ (Swift X 14 AI) மற்றும் ஏசர் ஸ்விஃப்ட் எக்ஸ் 14 (Swift X 14)ஆகிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு லேப்டாப் மாடல்களும் சிறந்த கிராபிக்ஸ் வசதி மற்றும் மிகவும் மெல்லிய வடிவமைப்பில் தரமான டிஸ்பிளே வசதிகளுடன் வெளிவந்துள்ளன.
ஏசர் ஸ்விஃப்ட் எக்ஸ் 14 ஏஐ அம்சங்கள் (Acer Swift X 14 AI specifications): ஏஎம்டியின் ரைஸன் ஏஐ 9 365 பிராசஸர் (AMD Ryzen AI 9 365 processor)உடன் இந்த ஏசர் ஸ்விஃப்ட் எக்ஸ் 14 ஏஐ மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு என்விடியா ஜிபோர்ஸ் ஆடிஎக்ஸ் 5070 கிராபிக்ஸ் ஆதரவும் இந்த லேப்டாப் மாடலில் உள்ளது.

என்விடியா ஸ்டூடியோ டிரைவர்ஸ் (NVIDIA Studio Drivers), டிஎல்எல்எஸ் 4 (DLSS 4), என்விடியா என்ஐஎம் மைக்ரோசர்வீசஸ் உள்ளிட்ட ஆதரவுகளுடன் ஏசர் ஸ்விஃப்ட் எக்ஸ் 14 ஏஐ மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இவை வீடியோ எடிட்டிங், ரெண்டரிங் மற்றும் AI மேம்பாடு போன்ற பணிகளுக்கு ஏற்றதாக உள்ளது.
14.5 இன்ச் ஒஎல்இடி டச் ஸ்கிரீன் டிஸ்பிளே உடன் ஏசர் ஸ்விஃப்ட் எக்ஸ் 14 ஏஐ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த டிஸ்பிளேவில் 2880 x 1800 பிக்சல்ஸ், 16:10 அஸ்பெக்ட் ரேசியோ (aspect ratio), 100% டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியும் இதில் உள்ளது.
32ஜிபி வரை LPDDR5X மெமரி மற்றும் 1 TB PCIe Gen 4 SSD ஸ்டோரேஜ் ஆதரவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த ஏசர் ஸ்விஃப்ட் எக்ஸ் 14 ஏஐ மாடலில் 1080p IR வெப்கேம், டூயல் மைக்ரோபோன்கள், முக அங்கீகாரம்(Facial Recognition), பிங்கர் பிரிண்ட் ரீடர் உள்ளிட்ட ஆதரவுகளும் உள்ளன.
அதேபோல் DTS:X அல்ட்ரா ஸ்பீக்கர்கள், வைஃபை 6இ, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், உள்ளிட்ட வசதிகளும் இந்த ஏசர் ஸ்விஃப்ட் எக்ஸ் 14 ஏஐ மாடலில் உள்ளது. பின்பு இந்த டேப்டாப் மாடல் ஆனது 76 Wh பேட்டரியை கொண்டுள்ளது. எனவே இது 11 மணி நேரம் வீடியோ பிளேபேக்கை ஆதரிக்கிறது. இதன் எடை 1.56 கிலோ ஆகும். டைட்டானியம் கிரே (Titanium Gray) நிறத்தில் இந்த லேப்டாப் வாங்க கிடைக்கும்.
ஏசர் ஸ்விஃப்ட் 14 அம்சங்கள்: SFX14-73G என்ற மாடல் நம்பர் கொண்ட ஏசர் ஸ்விஃப்ட் 14 லேப்டாப் மாடலில் இன்டெல் கோர் அல்ட்ரா 9 பிராசஸர் வசதி உள்ளது. இன்டெல் AI பூஸ்ட், என்விடியா ஆர்டிஎக்ஸ் 5070 (NVIDIA RTX 5070) கிராபிக்ஸ், 14.5 இன்ச் ஒஎல்இடி டச் ஸ்கிரீன் டிஸ்பிளே உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த புதிய லேப்டாப் வெளிவந்தது.

32 ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 1 TB PCIe Gen 4 SSD எனும் ஸ்டோரேஜ் வசதியும் ஏசர் ஸ்விஃப்ட் 14 மாடலில் உள்ளது. 1080p IR வெப்கேம், டூயல் மைக்ரோபோன்கள், DTS:X அல்ட்ரா ஆடியோ 76 Wh பேட்டரி, வைஃபை 6இ, புளூடூத் 5.3 உள்ளிட்ட ஆதரவுகளுடன் இந்த லேப்டாப் வெளிவந்துள்ளது. பின்பு இதன் எடை 1.58 கிலோ ஆகும்.
விலை?
ஏசர் ஸ்விஃப்ட் எக்ஸ் 14 ஏஐ மற்றும் ஏசர் ஸ்விஃப்ட் 14 லேப்டாப் மாடல்கள் வரும் ஜூலை 2025 முதல் உலக சந்தையில் விற்பனைக்கு வரும். மேலும் இந்த லேப்டாப் மாடல்கள் EUR 1,799 (இந்திய மதிப்பில் ரூ.1,73,067) விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
photo credit: acer, gizmochina,


Click it and Unblock the Notifications








