Home
Computer

என்னாது 2 in 1 ஏஐ டிஸ்பிளேயா? தெறிக்கவிடும் அசுஸ் ப்ராஜெக்ட் ப்ரீகாக் லேப்டாப்.!

அசுஸ் நிறுவனம் தனது புதிய அடுத்த நிலை ஜெனெரேஷன் லேப்டாப் ஐ அறிமுகம் செய்துள்ளது. இது சாதாரண லேப்டாப் போல் இல்லாமல் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழிநுட்பத்துடன் கூடிய இரண்டு தொடுதிரையுடன் வருகிறது.

By Sharath

அசுஸ் நிறுவனம் தனது புதிய அடுத்த நிலை ஜெனெரேஷன் லேப்டாப் ஐ அறிமுகம் செய்துள்ளது. இது சாதாரண லேப்டாப் போல் இல்லாமல் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழிநுட்பத்துடன் கூடிய இரண்டு தொடுதிரையை கொண்டுள்ளது.

2 in 1 ஏஐ டிஸ்பிளேயா? அசுஸ் ப்ராஜெக்ட் ப்ரீகாக் லேப்டாப்.!

இந்த ஆண்டில் நடைபெற்ற கம்புயூடேக்ஸ் 2018 விழாவில் அசுஸ் நிறுவதின் ஜென்புக் ப்ரோ 15 மாடல் லேப்டாப் உடன் ப்ராஜெக்ட் ப்ரீகாக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. முன்பு லெனோவா நிறுவனத்தால் வெளியிடப் பட்ட லெனோவா யோகா புக் மாடல் லேப்டாப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த புதிய ப்ரீகாக் லேப்டாப். ஆனால் லெனோவா லேப்டாப் போன்று இல்லாமல் தனது இரண்டு டிஸ்பிலே திரையும் அட்டகாசமாகப் பயன்படுத்தும் படி வடிவமைத்துள்ளது.

ப்ராஜெக்ட் ப்ரீகாக் 2 இன் 1 லேப்டாப்

ப்ராஜெக்ட் ப்ரீகாக் 2 இன் 1 லேப்டாப்

செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் ஆகியவை கம்ப்யூட்டிங் சேவையை மாற்றியமைக்கின்றன, இதனால் பயனர்களுக்கு புதிய சேவையை உருவாக்கிச் சிறந்த அனுபவங்களை வழங்குமென்று அசுஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய ப்ராஜெக்ட் ப்ரீகாக் மாடல் லேப்டாப் 2 இன் 1 டூயல் திரை மற்றும் தொடுதிரை கீபேட் சேவையைப் பயனருக்கு வழங்குகிறது. இத்துடன் இதன் சிறப்பம்சம் 360 டிகிரிக்கும் இதை திருப்பலாம், இதைநீங்கள் நோட்புக் போன்று பயன்படுத்தலாம் மற்றும்இதை நீங்கள் பிளாட் மோட் மற்றும் டென்ட் மோட் இல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 விபரக்குறிப்பு

விபரக்குறிப்பு

இன்னம் இந்த அட்டகாசமான லேப்டாப் இன் விலை மற்றும் விபரக்குறிப்புகள் வெளிவரவில்லை. அசுஸ் நிறுவனமும் இரகசியமாக வைத்துள்ளது. அசுஸ் பயனர்களின் ஆர்வத்தை ப்ரோட்டோடைப் ப்ரீகாக் லேப்டாப் அதிகரித்துள்ளது மற்றும்முகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய AI- இயக்கம்

புதிய AI- இயக்கம்

குறிப்பாக இந்த புதிய ப்ரீகாக் லேப்டாப் இல் கீபோர்ட் இல்லாமை கூடுதல் காட்சி இடத்தை வழங்குகிறது, இத்துடன் ஆசஸ் அறிவாற்றல் டச் என்று ஒரு புதிய AI- இயக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ப்ரீகாக் லேப்டாப் 2019

ப்ரீகாக் லேப்டாப் 2019

இந்த அசுஸ் இன் ப்ரீகாக் லேப்டாப் இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2019 இன் தொடக்கத்தில் விற்பனைக்கு வெளியிடப்படுமென்று அசுஸ் நிறுவனம்தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Computex 2018 ASUS reach for the sky with Project Precog: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X