வைரஸ் வந்த கம்பியூட்டரை பாதுகாக்க...!

By Keerthi
|

இன்றைய மாடர்ன் டிஜிட்டல் உலகம் தரும் அனைத்து கேடு விளைவிக்கும் புரோகிராம்களிடம் இருந்தும், உங்கள் கம்ப்யூட்டரை மிகக் கஷ்டப்பட்டு, பாதுகாக்கிறீர்கள்.

உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை அப்டேட் செய்கிறீர்கள். சந்தேகப் படும்படியான இணைய தளங்கள் பக்கமே செல்லாமல் இருக்கிறீர்கள். அதே போல, சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் லிங்க்களில் கிளிக் செய்வதில்லை.

ஜாவா, ப்ளாஷ் மற்றும் அடோப் ரீடர் புரோகிராம்களை அவ்வப்போது அப்டேட் செய்து வைக்கிறீர்கள். அல்லது இவை இல்லாமலேயே, உங்கள் கம்ப்யூட்டரை இயக்கி, உங்கள் பணியை முடிக்கிறீர்கள்.

இப்படி மிகக் கவனமாகக் கம்ப்யூட்டரில் செயல்பட்டாலும், மிகத் தந்திரமான ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் ஒன்று, ஏதோ ஓர் இடத்தில் உள்ள பிழையான இடம் மூலம், உங்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து, தன்னை அடையாளம் காட்டுகிறது.

சில சில்மிஷ மாற்றங்களை உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்படுத்துகிறது. வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு கம்ப்யூட்டரை, பயம் கலந்த அப்பாவி உரிமையாளராக ஆகிவிட்டீர்கள். இங்கு என்ன செய்யலாம்? அதனையே இங்கு பார்க்கப் போகிறோம்.

வைரஸ் வந்த கம்பியூட்டரை பாதுகாக்க...!

பொதுவாக, உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, அதில் உள்ள மால்வேர் புரோகிராமினை நீக்க வேண்டும்

சம்பந்தப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர், நிஜமாகவே பாதிக்கப்பட்டுள்ளதா? ஏனென்றால், ஒரு சிலர், சவுண்ட் கார்ட் சரியாக வேலை செய்திடவில்லை என்றால், உடனே கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துவிட்டது என்ற முடிவிற்கு வந்துவிடுவார்கள்.

எனவே, பிரச்னை, நாம் வந்துவிட்டதாக நினைக்கும் வைரஸினாலா, அல்லது ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் அல்லது பயன்படுத்துபவரின் தவறான அணுகுமுறையா எனக் கண்டறிய வேண்டும்.

உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர், வழக்கத்திற்கு மாறாக, மிக மிக மெதுவாக இயங்குகிறதா? அல்லது, நீங்கள் செய்யச் சொல்லாத செயல்பாடுகளைத் தானாகவே மேற்கொள்கிறதா? அப்படியானால், வைரஸ் வந்துவிட்டது என்று எண்ணுவதற்குச் சரியான முகாந்திரம் உள்ளது.

அவ்வாறு முடிவெடுப்பதற்கு முன்னர், Windows Task Manager ஐ இயக்கவும்.இதற்கு விண்டோஸ் டாஸ்க் பாரில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் பாப் அப் மெனுவில், Task Manager என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Processes என்ற டேப்பினைத் திறக்கவும்.

இப்போது கிடைக்கும் விண்டோவில், சந்தேகப்படும் படியான, விநோத பெயரில் ஏதேனும் ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டுள்ளதா எனக் கவனிக்கவும். வைரஸ்கள் எல்லாம், விநோதமான பெயரிலேயே வரும் என நாம் அனுமானிக்கவும் முடியாது.

Best Mobiles in India

English summary
this is the article about the computer virus cleaning methods

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X