கம்பியூட்டர் மற்றும் லேப்பை பராமரிக்க சில நச் டிப்ஸ்!

Written By:
  X


  இன்றைய காலகட்டத்தில் கண்ப்பபொறி என்பது மனிதனின் மிக முக்கியமான தேவை ஆகிவிட்டது.

  விண்வெளியில் ராக்கெட் செலுத்துவது முதல், சினிமாவுக்கு டிக்கெட் எடுப்பது வரை அனைத்து பணிகளிலும் நீக்கமற நிறைந்துவிட்டது கம்ப்யூட்டர்

  அதன் முன்பாக அமர்ந்துவிட்டால் மட்டும் போதாது... முறையாகக் கையாள்வது பற்றிய பொது அறிவும் அவசியம்! கம்ப்யூட்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது, நல்ல முறையில் பராமரிப்பது மிக முக்கியம் ஆகும்.

  இதோ அதற்கு உங்களுக்கு சில டிப்ஸ்.

  Click Here For New Smartphones, Laptops, Tablets & More Gadgets Gallery

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  முறையான ஷட் டவுன்... முக்கியம்

  முறையான ஷட் டவுன்... முக்கியம்

  பலரும் கம்ப்யூட்டரை அணைப்பதை மின்விளக்கை அணைப்பதைப்போலச் செய்வார்கள். பலவிதமான பிரச்னைகளுக்கும் இது முக்கியமான காரணம் ஆகிவிடும். ஒவ்வொரு விண்டோவையும் முறையாக நிறுத்திவிட்டுப் பின்னரே கம்ப்யூட்டரின் திரையையும், சி.பி.யூ-வையும் அணைக்க வேண்டும். இல்லை என்றால்... கம்ப்யூட்டரின் மூளை குழம்பி, அடுத்த முறை ஆன் செய்யும்போது பலவிதமான பிரச்னைகளையும் கொடுக்கும்.

  பாக்கெட் மணி!

  பாக்கெட் மணி!

  'செபி'யின் இணையதளத்தில் (http://investor.sebi.gov.in/fevernacular.html) 'பணம்' என்ற தலைப்பில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் குழந்தை களுக்கான நிதிக்கல்வி விவரங்கள் இருக்கிறது.http://www.nism.ac.in/ என்ற வலைதளத்தில், 'ஃபைனான் ஷியல் எஜுகேஷன்' என்கிற தலைப்பில், குழந்தைகளுக்கான நடைமுறை நிதிக்கல்வி, 'பாக்கெட் மணி' என்கிற பெயரில் தரப்பட்டிருக்கிறது. இதை டவுன்லோடு செய்து, குழந்தைகளுக்கு கற்றுத் தரலாம்!

  கம்ப்யூட்டர் கிளீனிங் விதிகள்

  கம்ப்யூட்டர் கிளீனிங் விதிகள்

  கம்ப்யூட்டரின் அருகில் உண்பதோ, அருந்துவதோ கூடாது. சுத்தம் செய்யும் திரவங்களை நேரடியாக கம்ப்யூட்டர் மீது பீய்ச்ச வேண்டாம். சுத்தமான துணியில் தெளித்து, பிறகு கம்ப்யூட்டரைத் துடைக்கவும். வேக்குவம் கிளீனர் மூலம் வெளிப்புறத்தை சுத்தம் செய்யலாம். ஆனால், உட்பகுதியில் பயன்படுத்த வேண்டாம். சுத்தம் செய்யும்போது கம்ப்யூட்டரை அணைத்துவிடவும்.

  'பேக் அப்' கைகொடுக்கும்

  'பேக் அப்' கைகொடுக்கும்

  பல சமயங்களில் மிக முக்கியமான கோப்புகளை 'சி டிரைவ்' என்னும் பகுதியில் சேமித்து வைத்திருப்பார்கள். தவிர்க்க முடியாத காரணங்களினால் கம்ப்யூட்டரை ஃபார்மட் செய்யும்போது இவை அழிந்துபோகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. வேறு டிரைவ்களில் 'பேக் அப்'பாக முக்கியமான கோப்புகளைச் சேமித்து வையுங்கள். நிச்சயம் இது உங்களுக்கு உதவும்.

  பொது கம்ப்யூட்டர்... கூடுதல் கவனம்

  பொது கம்ப்யூட்டர்... கூடுதல் கவனம்

  பொது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும்போது, உபயோகித்து முடித்தவுடன் முறையாக 'லாக் அவுட்' செய்யுங்கள். மற்றவர்கள் உங்களது ஐ.டி-யில் விஷமம் செய்வதை இது தவிர்க்கும். கம்ப்யூட்டரை விட்டு விலகிய பிறகு கைகளை சுத்தமாகக் கழுவுவது முக்கியம். மௌஸிலும், கீ - போர்டிலும் எக்கச்சக்கமான கிருமிகள் இருக்கக்கூடும். இதனால், நோய்த் தொற்று ஏற்படலாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களில் எவரும் உங்களது யூசர் ஐ.டி, பாஸ்வேர்டு போன்றவற்றை கவனிக்கவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

  வைரஸ்... ஜாக்கிரதை

  வைரஸ்... ஜாக்கிரதை

  ஒருமுறை ஆன்டி வைரஸ் நிறுவிவிட்டால் அது எல்லா வைரஸ்களையும் தவிர்த்துவிடாது. அவ்வப்போது அப்டேட் செய்துகொண்டே இருக்கவேண்டும். காரணம், புதுப் புது வைரஸ்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறார்கள்.
  பெரும்பாலான வைரஸ்களை உற்பத்தி செய்வதே சில ஆன்டி வைரஸ் நிறுவனங்கள்தான் என்ற பேச்சும் உண்டு.

  வைரஸ் தடுப்புக்காக, ஒன்றுக்கு மேற்பட்ட ஆன்டி வைரஸ்களை நிறுவக்கூடாது. தரமான நிறுவனத்தின் ஆன்டி வைரஸ் மென்பொருளையே நிறுவுங்கள். வைரஸ் ஏதேனும் புகுந்திருக்கிறதா என்று தினசரி உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்யுங்கள்.

  கம்ப்யூட்டரே கதியாக இருக்காதீர்

  கம்ப்யூட்டரே கதியாக இருக்காதீர்

  சிலர், வேலை வேலை என்று கம்ப்யூட்டரிலேயே ஆழ்ந்து இருப்பார்கள். வேறு சிலர் ப்ளாக், ட்விட்டர், ஃபேஸ்புக் என நாள் முழுக்க மூழ்கி... குடும்பம், உறவு என அனைத்தையும் துறந்து, கம்ப்யூட்டருக்கே அடிமையாகிவிடுவார்கள்.
  ஆரம்பத்திலேயே இதைக் கவனித்து நெறிமுறைப்படுத்தாவிட்டால், பலவிதமான சிக்கல்களும், தேவையற்ற மனஉளைச்சல்களும் ஏற்படக்கூடும். கம்ப்யூட்டருடன் அளவோடு உறவாடி, குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குவதே உத்தமம்.

  அளவுக்கு மிஞ்சினால் உடலுக்கு கேடு

  அளவுக்கு மிஞ்சினால் உடலுக்கு கேடு

  தொடர்ந்து கம்ப்யூட்டர் திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குப் பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு.

  பார்வைக் குறைபாடு, முதுகுவலி, தலைவலி போன்றவை அதிக நேரம் கம்ப்யூட்டர் திரையையே உற்றுப் பார்ப்பதாலும், ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதா லும் ஏற்படுகின்றன. இடைவெளி கொடுத்து, சற்றே நடமாடி, தூரத்தில் தெரியும் மரங்களிலோ அல்லது கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகளிலோ சற்று நேரம் கவனம் செலுத்துங்கள். புத்துணர்ச்சி கிடைக்கும்.

  'எர்த்' விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்

  'எர்த்' விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்

  சில கம்ப்யூட்டர்களின் இரும்புப் பகுதியைத் தொடும்போது 'சுரீர்' என்று மெலிதான ஷாக் அடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். சரியான முறையில் 'எர்த்' இணைப்பு கொடுக்காததே இதற்குக் காரணம்.

  கவனிக்காமல் விட்டுவிட்டால்... மின்கசிவு ஏற்படவும், கூடுதல் மின்சாரம் உங்களது உடலில் பாயவும் நேரிடலாம்.

  சரியான எலெக்ட்ரீஷியன் உதவியுடன் முறையாக எர்த் இணைப்பைக் கொடுப்பது அவசியம். 'லேசான ஷாக்'தானே என்று அசிரத்தையாக இருந்துவிட்டால், ஆபத்தான அளவு மின்சாரம் பாயவும் வாய்ப்பு உண்டு.

  உயரம்... உஷார்

  உயரம்... உஷார்

  படிக்கும்போது வெளிச்சம் நமக்குப் பின்புறத்தில் இருந்து வருவது நல்லதல்லவா? ஆனால், கம்ப்யூட்டரில் பணிபுரியும்போது வெளிச்சம் நமக்கு முன்புறம் இருந்து வருமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

  அதுதான் கண்ணுக்கு சிரமம் தராமல் இருக்கும். மேலும் ரேடியேஷனைத் தவிர்க்கும் திரையையும் மானிட்டருக்குப் பொருத்தலாம்.

  திரையின் வெளிச்ச அளவு மற்றும் வண்ணங்களின் அடர்த்தி ஆகியவையும் தேவையான அளவிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உயரம் மற்றும் மேஜையின் உயரம் ஆகியவற்றைக் கவனத்தில்கொண்டு அதற்கேற்ற உயரம் உடைய நாற்காலிகளைத் தேர்வு செய்யுங்கள்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more