கம்ப்யூட்டர் : இதெல்லாம் நம்பாதீங்க ப்ளீஸ்..!!
ஒவ்வொரு தொழில்நுட்பம் வெளியாகும் போது அவை குறித்து பல்வேறு வகையான செய்திகள் வெளியாகும். அவற்றில் பெரும்பாலான தகவல்களை உண்மையாக கருத்தில் கொள்வது தப்பு என அனைவரும் புரிந்து கொள்ளும் தருவாயில் புதிய தொழில்நுட்பம் ஒன்று வெளியாகும், பின் இதே விஷயம் தான் மீண்டும் தொடரும்..
அந்த வகையில் கணினி குறித்து உண்மை என நாம் அனைவரும் பின்பற்றிய அனைத்தும் பொய் என்கின்றனர் கணினி வல்லுநவர்கள், எவை அவை என்பதை தொடர்ந்து பாருங்கள்..

வைரஸ்
கணினியின் வேகம் குறைய வைரஸ், மால்வேர் மட்டும் காரணமாக முடியாது, ஒரே சமயத்தில் பல செயலிகளை பயன்படுத்துவது தான் கணினியின் வேகம் குறைய காரணமாக இருக்கின்றது.

க்ளீனர்
க்ளீனர் மென்பொருள்களை பயன்படுத்தினால் ஜன்க் ஃபைல்களை சுத்தம் செய்ய முடியும், ஆனால் இதனால் கணினி வேகம் அதிகரிக்க வாய்ப்புகள் குறைவே.

ஆன்டிவைரஸ்
கணினியை பாதுகாக்க கட்டாயம் ஆன்டிவைரஸ் தேவையே, விண்டோஸ் மற்றும் மேக் என இரு கணினகளுக்கும் இது பொருந்தும்.

ஆஃப்
அடிக்கடி கணினியை ஆஃப் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது, தேவையில்லாத நேரத்தில் அதனினை ஆஃப் செய்து வைக்கலாம்.

காந்தம்
கணினியில் இருக்கும் தகவல்களை அழிக்க காந்தகத்தினை பயன்படுத்துவது பயன் தராது.

மேக்
மேக் கணினிகள் சிறந்தது என்றில்லை, அவைகளும் சாதாரண கணினிகளே, அவை ஓஎஸ் எக்ஸ் மூலம் இயங்குவதால் அவை சிறப்பான ஒன்றாக கருதப்படுகின்றது.

ப்ரவுஸர்
ப்ரவுஸர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகினஅறன, அவை இண்டர்நெட் மூலம் பணிகளை முடிக்க உதவும் செயலிகளே தவிற அவைகளால் வேறு எந்த பயன்களும் இல்லை.

கோர் மற்றும் ரேம்
அதிக கோர் மற்றும் ரேம் இருந்தால் கணினி சீராக இயங்கும் ஆனால் அதனால் வேகம் அதிகரிக்கும் என்பதில் உண்மை கிடையாது.

அசெம்பிள்
கொஞ்ச காலத்திற்கு முன் வரை கணினிகளை தனிாக அசெம்பிள் செய்வது வாங்குபவருக்கு பணத்தை மிச்சம் செய்து வந்தது. ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை.

முகநூல்
இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications