முற்றிலும் மாறுபட்ட புதிய மினி கணினி

Posted By: Karthikeyan
முற்றிலும் மாறுபட்ட புதிய மினி கணினி

கமோடோர் நிறுவனம் சமீபத்தில் ஒரு சிறிய கணினியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சிறிய கணினிக்கு கமோடோர் அமிகா மினி என்ற பெயரையும் சூட்டியிருக்கிறது. இந்த கணினி மிகவும் சிறிய கணினி ஆகும். ஆனால் இந்த கணினி நிறைய தொழில் நுட்பங்களுடன் வருகிறது.

தற்போது சிறிய கணினிகளே மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. ஏனெனில் இந்த சிறிய கணினிகளை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். அதே நேரத்தில் மிக எளிதாக இடம் மாற்றம் செய்ய முடியும்.

இந்த அமிகா மினி கணினி 3.5 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட இன்டல் கோர ஐ7-2700கே ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதோடு 16ஜிபி டிடிஆர்3 ரேமையும் கொண்டிருக்கிறது.

இந்த மினி கணினியில் க்ராபிக்ஸ் வசதியும் பிரமாதமாக உள்ளது. க்ராபிக்ஸ் வசதிக்காக இந்த கணினி 1ஜிபி வீடியோ மெமரியுடன் கூடிய என்விடியா ஜிஇபோர்ட் ஜிடி 430 க்ராபிக்ஸ் கார்டை வழங்குகிறது. மேலும் இந்த கணினி 1 டிபி ஹார்ட் டிஸ்கைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கணினி வைபை ரேடியோ மற்றும் ப்ளூரே ட்ரைவயும் கொண்டுள்ளது.

இந்த மினி கணினி மிக எளிய டிசைனில் வருகிறது. அதாவது ஒரு சிறிய செவ்வக பெட்டி வடிவில் வருகிறது. ஆனால் இதன் விலை சற்று அதிகம் ஆகும். அதாவது இதன் விலை ரூ.125500 ஆகும். விலை அதிகமாக இருந்தாலும் இது ஒரு முற்றிலும் மாறுபட்ட கணினி ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot