பல்வேறு திரை அளவுகளில் வரும் ஒரே டேப்லெட்!

அந்த வரிசையில் கோபி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வரும் ஜனவரியில் ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்விஜ் வெர்சன் கொண்ட தனது புதிய டேப்லெட்டை களமிறக்க இருக்கிறது.
கோபியின் இந்த புதிய டேப்லெட் ஐசிஎஸ் என்று அழைக்கப்படும். இந்த ஐசிஎஸ் டேப்லெட்டுகள் பல அளவுகளில் வருகிறது. அதாவது 7 இஞ்ச், 8 இஞ்ச், 9 இஞ்ச், 9.7 இஞ்ச் மற்றும் 10 இஞ்ச் திரை அளவுகளில் வருகின்றன. ஆனால் எல்லா டேப்லெட்டுகளுமே ஒரே பிராசஸரைக் கொண்டுள்ளன. அதாவது இவற்றின் பிராசஸர் 1 ஜிஹெர்ட்ஸ் எஆர் எம் கோர்ட்டெக்ஸ் ஏ8 சிபியு ஆகும். இவை மல்டி டச் திரைகளைக் கொண்டவை.
இந்த ஐசிஎஸ் டேப்லெட்டுகள் பல அற்புதமான சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. ஏற்கனவே கூறியது போது இதன் இயங்கு தளம் ஆன்ட்ராய்டு வெர்சன் வி4.0 ஐஸ் க்ரீம் சான்விஜ் ஆகும். இதன் திரை மல்டி டச் கெப்பாசிட்டிவ் தொழில்நுட்ப வசதி கொண்டது.இதன் ரேம் 1ஜிபி ஆகும். 32ஜிபி வரை விரவுபடுத்தக்கூடிய மெமரியை இந்த டேப்லெட் கொண்டுள்ளது.
இந்த ஐசிஎஸ் டேப்லெட் மெல்லிய ஒரு ஸ்டைலான டேப்லெட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1080பி எச்டிஎம்ஐ அவுட்புட்டைக் கொண்டுள்ளது. அதுபோல் அதிவேகம் கொண்ட 802.11 பி/ஜி/என் வைஃபை வசதியையும் வழங்கும்.
கோபி தனது 5 வகையான ஐசிஎஸ் இன்டர்நெட் டேப்லெட்டுகளை லாஸ் வேகாஸில் ஜனவரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. கோபி நிறுவனத்தின் அதிகாரி ஜோடி சாலி கூறும் போது, இந்த ஐசிஎஸ் டேப்லெட்டுகள் மிகவும் தலை சிறந்ததாகவும் அதே நேரத்தில் சரியான விலையிலும் இருக்கும், என்றார்.
இந்த ஐசிஎஸ் டேப்லெட்டுகள் 1080பி எச்டிஎம்ஐ அவுட்டுகளைக் கொண்டுள்ளதால் இவற்றில் பிரவுசிங், ஷேரிங், மெய்லிங், கேமிங் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்க முடியும். இவற்றின் விலை இன்னும் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications