அடுத்த ஆண்டு புதிய டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்தும் சிஸ்கோ!

கடந்த ஆகஸ்டு மாதத்தில் சி்ஸ்கோ நிறுவனம் ஒரு ஆன்ட்ராய்டு டேப்லெட்டை அறிமுகப்படுத்தியது. அந்த டேப்லெட் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு உதவி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த டேப்லெட்டில் வைஃபை மற்றும் பல வசதிகள் இருந்தன. இந்த டேப்லெட்டின் தொடுதிரை 7 இன்ச் ஆகும்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த இருக்கும் புதிய டேப்லெட்டுகளைப் பற்றிய தகவல்களை சிஸ்கோ நிறுவனம் இன்னமும் ரகசியமாகவே வைத்திருக்கிறது. ஆனாலும் அவற்றைப் பற்றிய தகவல்கள் கசிந்து வருகின்றன.
இந்த புதிய டேப்லட்கள் ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்விஜ் இயங்கு தளத்தைக் கொண்டிருக்கும். மேலும் இந்த டேப்லெட்டுகள் அதிக பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருக்கும். மேலும் இந்த டேப்லெட்டுகளில் அதிகமான அப்ளிகேசன்களை கொண்டிருக்கும்.
இந்த புதிய டேப்லட்டுகள் வர்த்தக தேவைகளை நிறைவு செய்யும் நோக்கத்திற்காகவே உருவாக்கப்படுகின்றன. இவற்றின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
போட்டி நிறைந்த டேப்லெட் சந்தையில் ஏற்கனவே ஆப்பிள் மற்றும் பிளாக்பெரி நிறுவனங்கள் அதிக வசதிகள் கொண்ட தங்களது வர்த்தக டேப்லட்டுகளை களமிறக்கி இருக்கின்றன. ஆனாலும் சிஸ்கோ டேப்லட்டுகள் புதிய தொழில் நுட்பத்துடன் புதிய சிந்தனையுடன் வருவதால் அந்த நிறுவனங்களுடன் போட்டி போட முடியும் என்று நம்புகிறது.


Click it and Unblock the Notifications