Home
Computer

பிலிப்ஸ் பிராண்டில் புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் சீன நிறுவனம்

By Super
பிலிப்ஸ் பிராண்டில் புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் சீன நிறுவனம்
சீனாவை சேர்ந்த சென்ஸன் சாங் பெய் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

மொபைல்போன் தயாரிப்பில் புகழ்பெற்ற சீனாவை சேர்ந்த சென்ஸன் சாங் பெய் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிலிப்ஸ் நிறுவனத்தின் மொபைல் வர்த்தகத்தை கையகப்படுத்தியது.

இந்த நிலையில், பிலிப்ஸ் மொபைல் பிராண்டிலேயே புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறக்க சென்ஸன் சாங் பெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பிலிப்ஸ் எக்ஸ்-9320 என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த மாடல் டியூவல் சிம் வசதி கொண்டது. விரைவில் வர இருக்கும் ஆப்பிள் ஐபோன்-5, சாம்சங் கேலக்ஸி எஸ் வரிசை மாடல்களுக்கு இந்த பிலிப்ஸ் எக்ஸ்-9320 ஸ்மார்ட்போன் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதில் உள்ள ட்ராம்ப் கார்டு வசதி கேலக்ஸி எஸ் மாடலுக்கு சிறிய சேதாரத்தை ஏற்படுத்தும். எக்ஸ்-9320 மாடல் 4.3 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்டது. கூகுள் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரீட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எக்ஸ் 9320 மாடல் டயூல் சிம் வசதி கொண்ட ஹேண்ட்செட். இந்த டயூவல் வசதி 2 ஜிஎஸ்எம் சிம் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. இதில் 3ஜி காம்பேட்டிபிலிட்டி வசதியையும் பெறமுடியும். இதில் செனியம் தொழில் நுட்பம் இல்லை.

இதில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பான பேட்டரி மூலம் 15 மணி நேரம் டாக் டைம் மற்றும் 960 மணி நேரம் ஸ்டாண்ட்-பை டைமை தருகிறது. ஆப்பிள் ஐபோன் 7 மணி நேரம் டாக் டைம் மற்றும் 300 மணி நேரம் ஸ்டான் பை டைம் கொடுக்கிறது. இந்த அரிய வகை மாடல் தீபாவளி பண்டிகையின்போது வெளிவர உள்ளது. பிலிப்ஸ் எக்ஸ்- 9320 மாடலை ரூ.8,500 விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X