அமெரிக்காவை ஓரங்கட்டிய சீனா.!

By Aruna Saravanan
|

உலகிலேயே மிக சக்தி வாய்ந்த கம்ப்யூட்டராக சீனாவின் டியான்ஹே-2 (Tianhe-2) அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இருமுறை நிகழ்கின்ற டாப் 500 ஆராய்ச்சியில் டியான்ஹே-2 (Tianhe-2) ஆறாவது முறையாக முதலிடத்தை அடைந்துள்ளது. இன்னும் என்ன வேண்டும் சீனாவிற்கு.

இடைவெளி

இடைவெளி

வெறும் ஆறு மாத இடைவெளியில் - 37 -109 என்ற பட்டியளில் இருந்து மும்மடங்காக உயர்ந்துள்ளது. ஜூன் 2013 ஆம் ஆண்டு, டியான்ஹே-2 (Tianhe-2) உலகிலேயே வேகமான சூப்பர் கணிப்பொறி என்று டாப் 500 கூறியுள்ளது.

டைட்டன்

டைட்டன்

இக்கணினி கிட்டத்தட்ட 2- க்கு 1 என்ற வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தை பிடித்த டைட்டனை மிஞ்சிவிட்டது. 33.86 பெட்டாபிளாப்புக்கள் அளவுக்கு அதிவேகம் கொண்ட டியான்ஹே-2 (Tianhe-2) ஆராய்ச்சியாளர்களின் வெற்றி.

போட்டி

போட்டி

டியான்ஹே-2 வுடன் பல நாடுகளை சேர்ந்த கணினிகள் போட்டியிட்டன. இவையெல்லாம் சாதாரண கணினிகள் என்று நினைத்தீர்களா. இல்லை இல்லை. நீங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் பயன்படுத்தும் கணினிகள் அல்ல அவை, அவைகள் சூப்பர் கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படுகின்றன.

கணினி

கணினி

இவைகளுக்கு நீங்கள் அலுவலகத்தில் காணும் கணினிகளின் சர்வர்கள் போன்று இல்லை. ஆயிரக்கணக்கான முனைகளை கொண்டதாகும் மற்றும் அதிக அளவில் தரவுகளை சேமிக்கவும், மிகவும் கடினமான சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

இவற்றை பெரும்பாலும் இராணுவம் மற்றும் ஆய்வகங்கள் இருக்கும் இடத்தில் காண முடியும். நெருங்கக் கூட முடியாத சூப்பர் ஸ்டார்கள் இவை.

அமெரிக்கா

அமெரிக்கா

முதல் 10 இடத்தை பிடித்த அமெரிக்கா மற்றும் ஜப்பான் , சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த கணினிகள் பல அம்சங்களைக் கொண்டது. இதில் பெரும்பாலான இயந்திரங்கள் சவாலான பணிகளை செய்ய வள்ளன.

கணினி

கணினி

இவ்வகைக் கணினிகள் கல்வி நிறுவனங்கள் அல்லது அரசு தற்காப்பு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை. எடுத்துக்காட்டாக அமெரிக்காவின் டைட்டன் கணினி, காலநிலை மாதிரி மற்றும் லேசர் இணைவு உள்ளிட்ட கடினமான காரியங்களை செய்துள்ளது.

சாம்பியன்

சாம்பியன்

இவை அனைத்தையும் தோற்கடித்தது 1,300 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை கொண்டு உறுவாக்கப்பட்டு ஜூன் 2013 முதல் சாம்பியன் இடத்தை பெற்று வரும் டியான்ஹே-2 (Tianhe-2) சூப்பர் ஸ்டார் தானே.

போட்டி

போட்டி

அமெரிக்கா, லண்டன் என்று பல நாடுகளை சேர்ந்த சூப்பர் கணினிகளுடன் போட்டியிட்டு டியான்ஹே-2 (Tianhe-2) முதலிடத்தை அடைந்துள்ளது என்றால் சாதாரண விஷயமா.

சூப்பர் க்ம்ப்யூட்டர்ஸ்

சூப்பர் க்ம்ப்யூட்டர்ஸ்

டாப் 500 பட்டியலில் உள்ள கணினிகள் பற்றிய ஆராய்ச்சிகள் இந்த கணினிகளை சூப்பர் க்ம்ப்யூட்டர்ஸ் என்று கூறியுள்ளது. கணினி வளர்ச்சி குறைந்த போதிலும் இவ்வகை சூப்பர் கணினிகள் பல அற்புதங்களை புரிகின்றது என்று கூறியுள்ளது. அதிலும் Tianhe-2, 2018 ஆம் ஆண்டு 100 பெட்டாபிளாப்பு அளவுக்கு அதி வேகம் அடையக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மில்கி வே

மில்கி வே

ஆங்கிலத்தில் மில்கி வே (Milky Way) என்றழைக்கப் படும் டியான்ஹே-2 (Tianhe-2) கணினியால் விநாடிக்கு 33.86 பெட்டாபிளாப்புக்களை அடையமுடியும். இரண்டாம் இடத்தை பிடித்த அமெரிக்காவின் டைட்டன் க்ரே XK7 வை தாண்டி பல அம்சங்களை கொண்டது இது.

ஆப்பிள்

ஆப்பிள்

560.640 கருக்கள் அடங்கிய அமெரிகாவின் டைட்டன் க்ரேவைவிட உயர்ந்தது டியான்ஹே-2 (Tianhe-2) என டாப் 500 உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் ஆப்பிள் கணினியை விட இது மிகவும் வேகமானது. அதாவது இதை விட ஆப்பிள் கணினி 4,811 அளவு மெதுவாக செயல்படுகின்றது என்றால் Tianhe-2 எவ்வளவு வேகம் என்று பாருங்கள்.

வருத்தம்

வருத்தம்

ஆனால் இதைப் பற்றிய ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் இதை பயன்படுத்துவது மிக மிகக் கடினம் என்று கூறுகின்றார்கள். அவ்வளவு அம்சங்களை கொண்ட டியான்ஹே-2 (Tianhe-2) கணினியை பயன்படுத்துவது என்பது எளிதான காரியம் இல்லையாம்.

கணிப்பு

கணிப்பு

இது மேலோட்டமான கணிப்புதான். இந்த கணிப்பை வைத்து நீங்களே இதன் சக்தியை புரிந்து கொள்ளுங்கள். சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் Tianhe-2 வை ஆர்டர் பண்ண வேண்டுமா வேண்டாமா என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்.

விமர்சனம்

விமர்சனம்

இதை பற்றிய ஒரே விமர்சனம் என்னவென்றால் இதற்கு பொருத்தமான குறியீடுகளை எழுத பல ஆண்டுகள் ஆகலாம் என்று தென் சீன மார்னிங் போஸ்ட் கூறியுள்ளது.

குவாண்டம் கம்ப்யூட்டிங்

குவாண்டம் கம்ப்யூட்டிங்

இதற்குள் அடுத்த தலைமுறைக்கான சூப்பர் கணினிகள் வந்து விடும். குவாண்டம் கம்ப்யூட்டிங் சேர்ந்த ஒரு சில கூறுகள் அவற்றில் இருக்கும். அதாவது கணினியின் செயல்பாடுகளை மேலும் செம்மைபடுத்தி அடுத்த பத்து ஆண்டுகளில் பரவலாக பயன்படுத்த தயாராக இருக்கும் என்றும் மைக்ரோசாப்ட் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

குவாண்டம் பிட்

குவாண்டம் பிட்

' குவாண்டம் பிட்டுகள் ' பயன்பாட்டை நன்றாக அறிந்து கொண்டால் இன்று பயன்படுத்தும் மின் சுற்றுகளுக்கு பதில் ' குவாண்டம் பிட்டுகள் ' பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.

மகுடம்

மகுடம்

டியான்ஹே-2 (Tianhe-2) "மரபணு ஆய்வு, புதிய மருந்துகள், பெரிய விமானம் மற்றும் அதிவேக ரயில்கள் காற்றியக்கவியல் எண் கணக்கீடு, போன்றவைகளுக்கென தயாரிக்கப்பட்டுள்ளது. பரவலாக ஜுன் 2013 முதல் பல உதவிகளை புரிந்து வருகின்றது. இன்னும் இது எத்தனை சாதனை புரிய போகின்றது என்று தெரியவில்லை. பல வித அம்சங்களை அதிவேகத்தில் செயல்படுத்தும் டியான்ஹே-2 (Tianhe-2) சீனாவின் மகுடம் என்பதில் சந்தேகம் இல்லை.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
China has the fastest computer in the world. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X