Home
Computer

குறைந்த விலையில் கோபை வழங்கும் 6 புதிய டேப்லெட்டுகள்!

By Karthikeyan
 குறைந்த விலையில் கோபை வழங்கும் 6 புதிய டேப்லெட்டுகள்!

பெரும்பாலான டேப்லெட் தயாரிப்பாளர்கள் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்கும் தமது புதிய டேப்லெட்டுகளை விரைவில் களமிறக்க இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். அதே நேரத்தில் ஒரு சில சிறிய நிறுவனங்களும் பெரிய நிறுவனங்களுக்கு போட்டியாக தமது ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்துகின்றன. அந்த வகையில் கோபி நிறுவனம் தனது புதிய 6 ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகளை களமிறக்குகின்றது.

கோபியின் இந்த டேப்லட்டுகள் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்குவதால் இவை பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்த டேப்லெட்டுகள் 7 முதல் 10 இன்ச் அளவு வரையிலான திரைகளைக் கொண்டுள்ளன.

இதன் முதல் மாடல் கோபி மிட்7042 ஆகும். இந்த டேப்லெட் 800 x 480 பிக்சல் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் திரையைக் கொண்டிருக்கிறது. கோபி மிட்8042 டேப்ல் 800 x 600 பிக்சல் ரிசலூசன் கொண்ட 8 இன்ச் திரையைக் கொண்டுள்ளது.

அடுத்ததாக கோபி மிட்9042 டேப்லெட் 1280 x 800 பிக்சல் ரிசலூசன் கொண்ட 9 இன்ச் திரையைக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக 1024 x 768 பிக்சலர் ரிசலூசன் கொண்ட 9.7 இன்ச் அளவில் கோபி மிட்9742 என்ற டேப்லெட்டையும் கோபி அறிமுகம் செய்கிறது. மேலும் 10 இன்ச் அளவு திரை கொண்ட கோபி மிட்1042 மற்றும் கோபி மிட்10245 என்ற 2 டேப்லெட்டுகளையும் கோபி அறிமுகம் செய்கிறது.

மேற்சொன்ன 6 டேப்லெட்டுகளும் 1 ஜிஹெர்டஸ் கடிகார வேகம் கொண்ட கோர் கோர்ட்டெக்ஸ் 8 ப்ராசஸரைக் கொண்டிருக்கின்றன. அதோடு இவற்றில் 1 ஜிபி ரேம் உள்ளது. மேலும் எச்டிஎம்ஐ மற்றும் யுஎஸ்பி போர்ட்டுகளும் உள்ளன. எல்லா டேப்லெட்டுகளிலும் முகப்பு கேமராக்கள் உள்ளன. இறுதியாக 7 மற்றும் 8 இன்ச் டேப்லெட்டுகள் 4ஜிபி சேமிப்பையும் மற்ற டேப்லெட்டுகள் 8ஜிபி சேமிப்பையும் கொண்டிருக்கின்றன.

இந்த கோபி டேப்லெட்டுகளின் விலை ரூ.9000லிருந்து ரூ.15000க்குள் இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X