வங்கதேசத்தில் உலகின் குறைந்த விலை லேப்டாப்புகள் அறிமுகம்

By Super
|
வங்கதேசத்தில் உலகின் குறைந்த விலை லேப்டாப்புகள் அறிமுகம்
ஏழை நாடுகளில் ஒன்றாக கருதப்படும் வங்கதேசத்தில், உலகின் மிக குறைந்த விலை லேப்டாப்பை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த லேப்டாப்பின் பெயர் டோயல் ஆகும். டாக்காவில் நடந்த அரசு விழாவில் இந்த புதிய லேப்டாப்புகளை அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அறிமுகப்படுத்தினார்.

வங்கதேச அரசின் தொலைதொடர்பு நிறுவனமான டிஎஸ்எஸ் இந்த மலிவு விலை லேப்டாப்புகளை தயாரித்துள்ளது. இந்த புதிய லேப்டாப்புகள் 4 மாடல்களில் வருகிறது. அதாவது ப்ரைமரி, பேசிக், ஸ்டேன்டர்ட் மற்றும் அட்வான்ஸ்டு என்று 4 மாடல்களில் வருகிறது.

டோயல் என்று பெயரில் வரும் இந்த லேப்டாப்புகள் வங்கதேசத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் தகவல் தொடர்புக்கு பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும். இதன் எல்டிடி திரை 10 இன்ச் அளவு கொண்டதாகும். இது 800எம்ஹெர்ட்ஸ் கொண்ட விஐஎ 8650 ப்ராசஸர் கொண்டிருக்கிறது.

இதன் ரேம் 512எம்பி ஆகும். மேலும் இது 0.3 மெகா பிக்சல் கொண்ட வெப்காமைக் கொண்டிருக்கிறது. அதுபோல் 2.0 யுஎஸ்பி போர்ட்டும் இதில் உண்டு. அதிக இணையதள இணைப்பு இல்லாத நாடான பங்களாதேஷ் தனது வளர்ச்சிக்காக இணையதள இணைப்பை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இந்த புதிய லேப்டாப் மூலமாக இணையதளத்தில் அந்த நாடு தன்னிறைவு அடைந்துவிடும் என நம்பலாம்.


டோயல் பேசிக், ஸ்டேண்டர்ட் மற்றும் அட்வானஸ்ட் லேப்டாப்புகள் இன்டல் ப்ராசஸர் கொண்டு லினக்ஸை அடிப்படையாகக் கொண்ட இயங்குதளத்தைக் கொண்டுள்ளன. டோயல் பேசிக் 10.1 இன்ச் டிஸ்ப்ளேயும், டோயல் ஸ்டேண்டர்ட் 12.2 இன்ச் டிஸ்ப்ளேயும் மற்றும் அட்வான்ஸ்ட் 14 இன்ச் டிஸ்ப்ளேயும் கொண்டிருக்கின்றன. இவற்றின் டிஸ்ப்ளே ரிசலூசன் 1366*768 பிக்சல் ஆகும்.

பேசிக் மற்றும் ஸ்டேண்டர்ட் மற்றும் அட்வானஸ்ட் லேப்டாப்புகள் 2ஜிபி ரேமையும 1.3 மெகா பிக்சல் கேமராவையும் கொண்டிருக்கின்றன. இந்த 4 பிரிவு லேப்டாப்புகளும் 802.11பி/ஜி/என் பெற்றிருக்கின்றன. முதலில் இந்த லேப்டாப்புகள் அரசு அலவலகங்களில் வழங்கப்படும். பின் நாட்டிலுள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் மக்களுக்கு வழங்கப்படும். இப்போது 10% லேப்டாப்புகளே அரசு தயாரித்திருக்கிறது. இன்னும் 6 மாதங்களில் 60% லேப்டாப்புகள் தயாரிக்கப்பட்டுவிடும்.

விலையைப் பார்த்தால் டோயல் பிரைமரி ரூ.6,650க்கும், பேசிக் மாடல் ரூ.8,800க்கு கிடைக்கும் என தெரிகிறது. டோயல் ஸ்டேண்டர்ட் ரூ.14,400க்கும் அட்வான்ஸ்டு ரூ.17,000க்கும் கிடைக்கும். இந்த லேப்டாப் பங்களாதேஷ் அரசின் டிஜிட்டல் பங்களாதேஷ் என்ற திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் 2021க்குள் நாடு முழுவதும் இணையதள இணைப்பை வழங்குவதாகும்.

அதற்காக இதன் ஒரு பகுதியாக நாட்டின் தொலைத் தொடர்புத் துறையும் மிக விரைவாக நவீனப்படுத்தப்படுகிறது. இணையதள வசதி இல்லாமல் இந்த லேப்டாப் வெற்றியடைய முடியாது என்று பலர் விமர்சித்தாலும் லேப்டாப்பை வாங்க முடியாத வங்கதேசத்தை சேர்ந்த பெரும்பாலான ஏழை மக்கள் இந்த மலிவு விலை லேப்டாப்பை வாங்கி பயனடைவர் என்று அரசு நம்புகிறது. இந்த லேப்டாப் வெற்றி பெற்றால் பங்களாதேஷ் அரசின் கனவு நனவாகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X