சிஇஎஸ் 2019: அசத்தலான இரண்டு லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்த சாம்சங்.!
சாம்சங் நோட்புக் 9 ப்ரோ மாடல் 13.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுளளது, பின்பு டச் ஸ்கிரீன் டிஸ்பிளே ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இவற்றுள்ள அடக்கம்.
சாம்சங் நிறுவனம் சிஇஎஸ் 2019-நிகழ்வில் இரண்டு புதிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, இந்த லேப்டாப் மாடல்களின் பெயர் என்னவென்றால் சாம்சங் நோட்புக் 9 ப்ரோ, சாம்சங் பிளாஷ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 15-ம் தேதி முதல் இந்த இரண்டு லேப்டாப் மாடல்கள் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் சாம்சங்.காம் என்ற வலைதளத்திலும் இந்த லேப்டாப் மாடல்களை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் நோட்புக் 9 ப்ரோ:
சாம்சங் நோட்புக் 9 ப்ரோ மாடல் 13.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுளளது, பின்பு டச் ஸ்கிரீன் டிஸ்பிளே ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக இந்த லேப்டாப் சாதனம் 50வாட் பேட்டரி
மற்றும் தண்டர்போல்ட் 3 போர்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் நோட்புக் 9 ப்ரோ மென்பொருள்:
சாம்சங் நோட்புக் 9 ப்ரோ சாதனம் 8-வது ஜென் இன்டெல் கோர் ஐ7-8565யு உடன் 8ஜிபி எல்பிடிடிஆர்3 ரேம் இன்டெல் யுஎச்டி 620 கிராபிக்ஸ் கார்டு மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு ஆக்டிவ் பெண் மற்றும் விண்டோஸ் இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

சாம்சங் நோட்புக் பிளாஷ்:
சாம்சங் நோட்புக் பிளாஷ் லேப்டாப் மாடல் 13.3-இன்ச் முழு எச்டி எல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டள்ளது, பின்பு இந்த சாதனம் இன்டெல் செலரான் N4000 மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.

சாம்சங் நோட்புக் பிளாஷ் இணைப்பு ஆதரவுகள்:
சாம்சங் நோட்புக் பிளாஷ் சாதனம் யுஎஸ்பி டைப்-சி போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், மைக்ரோ எஸ்டி கார்டு போன்ற பல்வேறு இணைப்பு அதரவுகள் அடக்கம். மேலும் விண்டோஸ் இயங்குதளம் மற்றும் 39வாட் பேட்டரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

விலை:
சாம்சங் நோட்புக் பிளாஷ் சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.24,515-ஆக உள்ளது. சாம்சங் நோட்புக் 9 ப்ரோ சாதனத்தின் விலை அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications