சிஇஎஸ் 2019: வியக்கவைக்கும் விலையில் மூன்று லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்த டெல்.!
டெல் எக்ஸ்பிஎஸ் 13 (2019) லேப்டாப் 13-இன்ச் பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு டால்பி விஷன் மற்றும் டாப் வெப் கேமரா, போன்ற பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெறும் சிஇஎஸ் 2019 நிகழ்வில் சாம்சங், எல்ஜி, ஹனார் போன்ற பல்வேறு நிறுவனங்கள் புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் தற்சமயம் டெல் நிறுவனம் வியக்கவைக்கும் விலையில் மூன்று லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
டெல் லாட்டிடியூட் 7400, டெல் எக்ஸ்பிஎஸ் 13 மற்றும் டெல் இன்ஸ்பிரான் 7000 உள்ளிட்ட மூன்று வகை அசத்தலான லேப்டாப் மாடல்களை தான் டெல் நிறுவனம் தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது. பின்பு இந்த சாதன்களின் விலை சற்ற உயர்வாக
இருந்தபோதிலும் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

டெல் லாட்டிடியூட் 7400 2-இன்-1:
டெல் லாட்டிடியூட் 7400 2-இன்-1 மாடல் பொறுத்தவரை டேப்லெட் மற்றும் லேப்டாப் போன்று பயன்படுத்த முடியும், பின்பு ப்ராக்ஸிமிட்டி இன்டெல் கான்டெக்ஸ்ட் சென்சிங் டெக்னாலஜி 1 ஆல் இயங்கும் உலகின் முதல் லேப்டாப் டெல்
லாட்டிடியூட் 7400 ஆகும். மேலும் இந்த சாதனத்தில் 14-இன்ச் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் விலை:
சிங்கிள் சார்ஜரில் 24மணி நேரம் இந்த டெல் லாட்டிடியூட் 7400 2-இன்-1 லேப்டாப் மாடலை பயன்படுத்த முடியும், பின்பு இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.1,12,500-ஆக உள்ளது.

டெல் எக்ஸ்பிஎஸ் 13 (2019):
டெல் எக்ஸ்பிஎஸ் 13 (2019) லேப்டாப் 13-இன்ச் பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு டால்பி விஷன் மற்றும் டாப் வெப் கேமரா, போன்ற பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது, குறிப்பாக குவாட்-கோர் 8-வது ஜென் இன்டெல் கோர் செயலியைக் கொண்டுள்ளது. மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் டெல் எக்ஸ்பிஎஸ் 13 (2019) லேப்டாப் மாடல். இந்த டெல் எக்ஸ்பிஎஸ் 13 (2019) லேப்டாப் ஆரம்ப விலை ரூ.63,300-ஆக உள்ளது.

டெல் இன்ஸ்பிரான் 7000:
டெல் இன்ஸ்பிரான் 7000 லேப்டாப் 13-இன்ச் மற்றும் 15-இன்ச் டிஸ்பிளே ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது,பின்பு 8-வது
ஜென் இன்டெல் கோர் மற்றும் ஆக்டிவ் பெண், கைரேகை ஸகேனர் போன்ற பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா கலர் 2.0 மற்றும் டால்பி விஷன், சினிமாசவுண்ட் 2.0 போன்ற பல்வேறு இணைப்பு வசதிகள் கொண்டு வெளிவந்துள்ள இந்த லேப்டாப் மாடல்கள். மேலும் இந்த சாதனங்களில் விலை அறவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications